நானும் முஹிம்மாத்தும்
நானும் முஹிம்மாத்தும்
பாகம்-1
ஒரு நான்கைந்து வருடங்களாகவே காசர்கோடு முஹிம்மாத் ஸ்தாபனத்தோடு எமக்கு ஒரு இனிய தொடர்பு இருக்கிறது..
அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் இவர்கள் இந்த ஸ்தாபனத்தின் ஒரு முக்கிய நிர்வாகி.
திருவை அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி தங்கள் அவர்களின் வகுப்பு தோழர்...
அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் அவர்கள் எம்மிடம் முஹிம்மாத் ஸ்தாபனத்தை அறிமுகப்படுத்துகிற
ஓர் சிறு மலையாள நூலை தமிழில் மொழி மாற்றம் செய்ய இயலுமா என்று கேட்டார்கள்..
செய்யலாம் என்றேன்..
ஆனால் புக் முழுவதிலும் ஏராளமாக டிசைனிங் செய்வது இருக்கிறது அது கொஞ்சம் கடினமாக உள்ளது
அது நமக்கு தெரியாது
என்றேன்..
உடனே காசர்கோட்டிலிருந்து ஒருவர் வந்தார்
இரண்டு மூன்று தினங்கள் தங்க வேண்டி இருந்தது
அவரை ஜீவாவிடம்
அழைத்துச் சென்று அந்த
வேலையை முடித்து கொடுத்தேன்..
அந்த புத்தகம் பெங்களூர்ல ஒரு அச்சகத்தில் ஐயாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் முஹிம்மாத் மாணவர்கள் விநியோகம் செய்தனர்..
இது அவர்களுக்கு மிகவும் கை கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது..
அந்த புக்கை முழுவதும் படித்த ஒருவர் அடுத்த வினா எழுப்பும் முன் தனக்கான ஹதியாவை
கொடுத்துட்டு நகர்ந்து விடுவார்..
இவர்களுக்கு நேரம் மிச்சம்..
வளவளா என்று பேசிக் கொண்டிருக்க தேவையில்லை...
இந்த புக் வெளியிட்டது மூலம் முஹிம்மாத்துடனான எமது தொடர்பு கொஞ்சம் வலுத்தது..
அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத் அவர்கள் ஒரு
ஸியாரத்துக்க ஆள்.
லீவு விட்டால் போதும் உடனே தமிழ்நாடு தர்காக்களுக்கு ஸியாரத் செய்ய சென்று விடுவார்..
ஸியாரத் காரணமாக தமிழகத்தில் நிறைய தொடர்புகளை ஏற்படுத்தி அதை தனது கல்லூரியின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவார்...
கீழக்கரை ஸதக்கத்துல்லா அப்பாவை குறித்து அரபியில் நிறைய கவிதைகளை இயற்றியுள்ளார்..
இப்படி இவர்களுக்கு
சென்னை
பொள்ளாச்சி,
கோவை,
கீழக்கரை,
ஆரணி,
திருநெல்வேலி,
மேட்டுப்பாளையம்
சேலம்
திருச்சி
என நிறைய ஊர்களில் உள்ள மக்களுடன் தொடர்பு கிடைத்தது..
அவர்களும் (தமிழ்மக்கள்) முஹிம்மாத்துக்கு நேரம் கிடைக்கும் போது விசிட்டிங் செய்தனர்..
எல்லாம் நேரடியாக கண்டபோது மேலும் அவர்களுக்கு இந்த ஸ்தாபனத்துடன் ஒரு நேசமும் இணக்கமும் அதிகரிக்க வழிவகுத்தது.
வருடாவருடம் ஷஃபான் இறுதியில்
அஹ்தல் தங்கள் உரூஸ் முபாரக், மதரசா பட்டமளிப்பு விழா இவை அங்கே மிக விமரிசையாக நடைபெறும்....
நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும்..
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தற்போது மூன்று வருடங்களாக தமிழ் மாநாடு நடக்கிறது.
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு,
தமிழக முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள்
மேலும் பல மாவட்டத்தைச் சேர்ந்த உமராக்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர்..
கேரளாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வு பார்ப்பது மிகவும் அரிது..
கேரளாவில் உள்ள ஏராளமான ஸ்தாபனங்களுக்கு தமிழக மக்கள் ஏராளமான உதவிகள்,
ஆதரவுகள் வழங்குகின்றனர்..
அவர்களும் நம் மீது நேசம் கொண்டு உள்ளனர்..
மறுப்பதற்கில்லை..
ஆனால் முஹிம்மாத் தமிழ்நாடு மக்கள் மீது
காட்டும் அன்பும்,
நேசமும், இணக்கமும்,
அக்கரையும் வேறு லெவல்...
நாமும் அல்லாஹ்வின் அருளால் அந்த ஸ்தாபனத்திலிருந்து வருபவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுப்பது வழக்கம்..
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் அனைத்தையும் கபூல் செய்தருள்வானாக...
கழிந்த மாதம் முஹிம்மாத்திலிருந்து ஒரு ஃபோன் கால்..
நான் அப்துர்ரஹ்மான் அஹ்ஸனி உஸ்தாத்..
சொல்லுங்கள் ஹஸ்ரத்
என்ன விஷயம்..
வேறு ஒன்றும் இல்லை
நம்ம பிள்ளைகள் ஒரு ஐம்பது பேருக்கு தமிழ் மொழி எழுத, வாசிக்க,
படிக்க கற்றுக் கொடுக்கணும்.
அதுதான் என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டு இருக்கிறேன்
என்றார்கள்...
பின்னர் நானும் ஆலோசனையில் மூழ்கினேன்..
சரி நம்ம போவோம்
போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்போம் என்று
தீர்மானித்து மதரசாவில் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றேன்..
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
ஒரு ஏழெட்டு நாட்களில்
பிள்ளைகள் ஓரளவுக்கு எழுத வாசிக்க பேச கற்றுக் கொண்டார்கள்..
இதில முப்பத்தைந்து மாணவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்கள்..
மீதமுள்ளவர்கள் மலையாளிகள்...
இனி பாக்கி நாளை எழுதுகிறேன்..