ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 15
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_15....
#நோன்பாளியின்_சிறப்பு.
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின்
வாடையை விடச் சிறந்ததாகும்.
“எனக்காக நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகின்றார். நோன்பு எனக்கு உரியது.
அதற்கு நானே கூலி கொடுப்பேன்.
ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும்”
(என்று அல்லாஹ் கூறுகின்றான்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1894