ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 14
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_14....
#எவ்வளவு_பெரிய_பாவமானாலும் #மன்னிப்பு_வழங்க_அல்லாஹ்_தயார்..
எவ்வளவு பெரிய குற்றம் செய்தவருக்கும் பாவ மன்னிப்பு வழங்கப்படும் என்ற ரமலானின் செய்தி மக்களை பெரும் குற்ற உணர்வில் தவறான முடிவுக்கு போகாமல் தடுக்கும் ஒரு ஆயுதமாகும்.
திருக்குர் ஆன் எந்த மனிதருக்கும் ஊக்கம் தருகிற வார்த்தைகளை பேசுகிறது.
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (53) وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ (54)
ஒரு மனிதன் இதற்கு மேல் குற்ற உணர்வுக்குள்ளாக முடியாத என்ற நிலையில் வாழ்ந்த ஒரு மனிதருக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் மூலம் மன்னிப்பு வழங்கப்பட்ட்து.
பெருமானாரின் வாசலில் வந்து கசிந்துருகி அழுது நின்றார்.
ஒரு இளைஞர் அவர் அழுவதை பார்த்து முஆத் ரலி அவர்களும் அழுதார்கள். பிறகு பெருமானாரிடம் வந்து சொன்னார்கள்.
அவரை அழைத்து அவருடைய பாவங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அல்லாஹ் மன்னிப்பான். அவனுடைய வார்த்தை அனைத்து பாவங்களையும் விட உயர்வானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அவர் சமாதானம் அடைய வில்லை. இறுதியாக பெருமானாரிடம் தனது குற்றத்தை கூறினார்.
நான் ஏழு வருடங்களாக கப்ருகளில் இருக்கிற் மையத்துக்களின் கபன் ஆடையை திருடி வருகிறேன்.
ஒரு நாள் ஒரு இளம் பெண்ணின் கபனை திருடும் போது அவளுடைய அழகு என்னை மயக்கி விட்டது.
அந்த மைய்யித்தோடு நான் உறவு கொண்டு விட்டேன். அதை முடித்து நான் வெளியேறும் போது, மய்யித்துக்களின் மைதானத்தில் என்னை நிர்வாணப்படுத்தி, என்ன அசுத்தமானவாளாக ஆக்கிவிட்டவனே உன் இளமை நாசமாகட்டும் என்று ஒரு குரல் எனக்கு கேட்டது.
அல்லாஹ்வின் தூதரே எனக்கு சொர்க்கத்தின் வாடை கூட கிடைக்காது என்று அந்த இளைஞன் கூறினான். அதில் கோபமடைந்த பெருமானார் விலகிப் போ பாவியே என்று விரட்டினார். அவர் மதீனாவின் மலைகளில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி அழுது புலம்பினார். அவரை மன்னித்த செய்தியை அல்லாஹ் பெருமானாருக்கு
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (135) أُولَٰئِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ (136
என்ற வசனத்தை இறக்கினான்.
அந்த இளைஞனது பாவமும்
மன்னிக்கப்பட்டது....