Sirajudheen Ahsani
எழுத்தாளர்

உஸ்தாதின்_நம்பிக்கை_தரும்_பதில்

இந்தியன் கிராண்ட் முஃப்தியும்,
சமஸ்த கேரள ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளருமான சுல்தானுல் உலமா ஏ.பி.#அபுபக்கர்_பாகவி_ஹஸ்ரத் அவர்கள்
நேற்று கோழிக்கோடு ஜாமிஆ
மர்கஸில் நடைபெற்ற பட்டமளிப்பு மாநாட்டில் பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து ஆற்றிய உரை இந்தியாவிலுள்ள
முஸ்லிம் சமய-சமூக-அரசியல் தலைவர்களிடமிருந்து வந்த கருத்து ரீதியான அபிப்பிராயங்களில் மிகத் துல்லியமான, தெளிவான, முதிர்ச்சியான பதிலாகும்.

“வணக்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்,
அது நடைபெறும் இடம் எல்லாவிதமான அநீதிகளிலிருந்தும் விடுபட வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில்
வழிபடுவது ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, முஸ்லிம்கள் எப்போதும் வழிபாட்டுத் தலங்களை மிகுந்த கவனத்துடனே கட்டியுள்ளனர்.

ஒரு நாள் வரும்.
அந்த நாள் முஸ்லிம்களிடமிருந்து அபகரிப்பு செய்தது அவர்களிடமே
மீண்டு வரும்.

அதைத்தான் கஅபா மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது.

முஸ்லீம் சமூகத்தைத் தூண்டிவிடவோ, மன உளைச்சலை ஏற்படுத்தவோ யாரும் நினைக்க வேண்டாம்.
நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்,
அதன் அர்த்தம் நாங்கள் கோழைகள் என்பதல்ல...

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் அனுபவித்த நெருக்கடிகளையும், அதனை முறியடித்த வரலாற்றையும் உரையில் நினைவுகூர்ந்து, முஸ்லிம் சமூகத்துடன் ஒற்றுமையாக இருந்ததற்காக தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படு
பவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து உரை நிறைவுறுகிறது.

இந்த நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக விசுவாசிகளும்
முஸ்லிம் சமூகத்தின் நியாயமான உரிமைகளுடன் நிற்க தயாராக இருக்க வேண்டும் என்றும் உரையில் கோரிக்கை விடுக்கிறார்கள்.

நிச்சயமாக சுயமரியாதை,
கண்ணியம், ஆறுதல், நம்பிக்கை போன்ற வார்த்தைகள்தான் நேற்று இந்திய முஸ்லிம்கள் ஏ. பி உஸ்தாதிடம் இருந்து முழங்கி கேட்டனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாம் எவ்வாறு சூழ்ச்சிகளை மறிகடந்து வாழ வேண்டும் என்பதை நடைமுறையில் எமக்குக் காட்டிய தலைவர் தான் ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய கரசேவை பற்றி ராமர் கோயில் திறப்பு விழா சந்தர்ப்பத்தில் இப்போது மீண்டும் பேசும் உஸ்தாத்
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் மசூதிகளைக் கட்டியவரும் ஆவார்.
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகளை கட்டியுள்ளார்கள்.

வல்லோன் அல்லாஹ் உஸ்தாத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும் வழங்கியருள்வானாக...

✍️ஜவாத் முஸ்தஃபி....

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.