முக கவசம் அணிவதின் சில ஒழுக்கங்கள்
முகக்கவசத்திலும்_இபாதத்தின் நன்மைகளை_பெற்றுக்கொள்வோம்.
தமிழில்: Haja_mydheen
எந்த ஒரு நற்செயலும் நமக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். அத்தகைய நற்செயல்களைச் செய்யும்போது நாம் வைக்கின்ற நிய்யத்தும், செய்கின்ற முறைகளும், இறைவனின் பொருத்தத்திற்காக என்ற நமது தீர்மானமும் சேரும்போது அந்தச் செயல்களால் கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக அல்லது அபரிமிதமாக ஆக்கிவிடுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் அப்படி ஒரு சுட்டுதலை தைக்காப்பள்ளி என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் மணக்காடு சென்ட்ரல் மஸ்ஜிதில் அறிவிப்புப் பதிவாக காணமுடிந்தது. நாமும் அத்தகைய நன்மைகளை அடையலாமே என்பதற்காகத்தான் இந்தப்பதிவு.
முகக்கவசம் அணிவது வைரஸ் பரவுதலிலிருந்து நம்மைக் காக்கிறது என்பது உண்மை. அந்த முகக்கவசம் அணிவதை எவ்வாறு இபாதத் ஆக ஆக்கலாம் என்பதே அந்தப் பிரசுரத்தின் உள்ளடக்கம். நாமும் கடைப்பிடிப்போம். நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.
1. பிஸ்மி மொழிந்துவிட்டு முகக்கவசம் அணியுங்கள்.
2. காதுகளில் அணியும்போது முதலில் வலது காதில் அணியுங்கள்.
3. அல்லாஹ்விற்கு இபாதத் செய்வதற்காக இந்த உடலை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த முகக்கவசத்தை அணிகிறேன் என்று நிய்யத் செய்து கொள்ளுங்கள்.
இன்ஷா அல்லாஹ். முகக்கவசத்திலும் இபாதத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.