தவ்ஹீத் வாதிகள் (என்று சொல்பவர்கள்) சவூதி ஸலஃபிஸம் அங்கீகரிக்கத் தயாரா..?
தவ்ஹீத்வாதிகள்
(என்று சொல்பவர்கள்)
சவூதி ஸலபிஸம்
அங்கீகரிக்கத் தயாரா?
முன்னோர்களான சஹாபாக்களையும்,
தாபியீன்களையும்
ஸலபு ஸாலீஹின்களையும்
யார் அங்கீகரித்து அவர்களுடைய பாதையை
பின் தொடர்கிறார்களோ அவர்கள் தான் ஸலபிகள்.
அதாவது சுன்னத்ஜமாஅத்தினர். இந்த அடிப்படை,
பாரம்பரியம் வஹாபிகளில்
பார்க்க இயலாது.
காரணம் தமிழ்நாட்டிலுள்ள (தவ்ஹித்ஜமாஅத்,
ஜாக், நஜாத், தப்லீக் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி, இந்தியன் தவ்ஹித் ஜமாத் மற்றும் அதன் கிளைகள்) நாங்கள் ஸலபிகள் என்று மார்தட்டும் இவர்களுடைய தலைவர்களும், முன்னோர்களும் யார் தெரியுமா?
இப்னு தைமிய்யா, இப்னுல்கய்யூம்,
இப்னு அப்துல் வஹாப், இப்னுபாஸ்,
உஸைமீன் பவுஸன், நாஸிருத்தின் அல்பானி, முஹம்மது இல்யாஸ்,
அபுல் அஃலா மவுதூதி போன்றவர்களாகும்.
இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றி தக்லீது செய்பவர்கள்தான் நவீன ஸலபிகள்.
மத்ஹபுகளின் இமாம்களை ஒருவரும் தக்லீது செய்யாமல் குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் பார்க்கச்சொல்லி திரும்ப சொல்லும் இவர்கள் பிறகு எப்படி மேற்கூறிய நவீனவாதிகளை
தக்லீது செய்வார்கள்.
சூஃபிஸமும் ஸலபிஸமும்
ஸலபிஸமும் சூஃபிஸமும் இன்று மோதும்போது ஸுஃபிஸம்,
சுன்னத் வல் ஜமாஅத்தினருடைய பெயராகவும்,
ஸலபிஸம் வஹாபிகளின் பெயராகவும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இதிலிருந்தெல்லாம் எவ்வளவோ வேறுபாடும் முரண்பாடும்தான் தமிழ்நாட்டு வஹாபிகளுடைய நிலை.
தமிழ்நாட்டு வஹாபிகள் எப்படிப்பட்ட நபரை தக்லீது செய்கிறோம் என்று வெளிப்படுத்துவது அவர்களுடைய கடமை.
காரணம் அநேகமான விஷயங்களில் வெளிநாட்டு பித்அத்வாதிகளும்,
தமிழ்நாட்டு வஹாபிகளும்,
சண்டை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் ஒன்றை அங்கீகரித்தால் மற்றொருவர்
அதை அங்கீகரிக்காமல் மறுக்கிறார்.
இது முற்றிலும் நாத்திகவாதமும், யுக்திவாதமும்தான்.
தமிழ்நாட்டு வஹாபிகளுடைய வாதங்களைப் பற்றி உண்மையில் ஒரு பெரிய ஆய்வு நடத்துவது உலமாக்களின் கடமை என்பதில் சந்தேகமில்லை.
ஒருசில உதாரணங்கள் மட்டும் பார்ப்போம்.
1. தமிழ்நாட்டு வஹாபிகளுக்கு ஒரு மத்ஹபையும் அங்கீகரிக்க கூடாது என்ற ஒருசட்டம் உண்டு.
ஆனால் இந்த வாதத்தை (வணக்கவழிபாடு விஷயங்களில்) ஹன்பலி மத்ஹபை அங்கீகரிக்கின்ற சவுதிகளுக்கிடையில் வாய் திறந்து கூற தமிழ்நாட்டு வஹாபிகள் தைரியம் காட்டுவார்களா?
2. முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்கள் ஒன்றுகூடுகின்ற பள்ளியில் சென்று ஜமாஅத்தில் பங்கெடுப்பது வாஜிபான அல்லது சுன்னத்தான புண்ணியச் செயலென்று கூறும் இவர்கள் சவுதிகளுக்கிடையில் சொல்ல தமிழக வஹாபிகளுக்கு துணிச்சல் உண்டா?
3. தராவீஹ் தொழுகை எட்டுரக்அத் மட்டுமென்றும், 20ரக்அத் என்பது பித்அத்தென்றும் கூறும் இவர்கள் இன்று மக்காவிலும் மதீனாவிலும் நடக்கின்ற தராவீஹ் பித்அத்தான செயலென்று சொல்ல தமிழக வஹாபிகள் தயாரா?
4. ஹரமிலும், சவுதியிலும் அனைத்து பள்ளிகளிலும்,
பெண்களுக்கெதிரான சொற்பொழிவுகளும் அவர்கள் பள்ளியில் நுழையக்கூடாது என்று எழுதி வைத்த அனைத்து போர்டுகளும் தவறென்றும் பெண்களின் சுதந்திரத்தை பறிப்பதுதான் என்றும் சவுதியில் வைத்து வஹாபிகள் சொல்லுவார்களா?
5. ஜூம்ஆ குத்பாவுக்கு அரபி கூடாதென்றும், ஒவ்வொரு நாட்டிலும் அவரவர்களுடைய மொழியில்தான் குத்பா நடத்த வேண்டுமென்றும் சவுதியில் சொல்லுவதற்கு தைரியமுள்ள ஒரு வஹாபியை வஹாபிகள் சுன்னத்வல் ஜமாஅத்தினருக்கு காட்டித் தருவார்களா?
6. ஜூம்ஆவுக்கு முன்பு சவுதியிலும் உலகிலுள்ள ஏனைய பள்ளிகளிலும் நடக்கின்ற இரண்டு பாங்கு தேவையில்லாத பித்அத்தான செயலென்று தமிழக வஹாபிகள் சவுதியில் வைத்து சொல்லத் தயாரா?
7. தொழுகையில் உலக முஸ்லிம்கள் கைகட்டுகின்ற
ரீதி தவறென்றும் அதற்கு பதில் நெஞ்சிற்கும் தாடிக்குமிடையில் தான் கைகட்ட வேண்டுமென்றும் தொப்பி அணிவது பித்அத் தென்றும் சொல்ல தமிழக வஹாபிகள் தயாராவார்களா?
8. ஓதிப்பார்ப்பது ஷிர்க்கென்றும் அது கூடாதென்றும் அது செய்கிறவர்களும் அவரை தொடர்பு கொள்கிறவர்களும் இஸ்லாமியனுடைய வட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார் களென்றும் சவுதியினுடைய ஏதாவது மூலையில் வைத்தாவது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு வஹாபி கூறுவாரா? அங்கே நடக்கின்ற மந்திர சாலைகளும், மந்திரித்த ஸம்ஸம் தண்ணீர், ஜைய்தூன் எண்ணெய், தாயத்து போன்றவையை தடை செய்ய வேண்டுமென்றும் அதற்கு அனுமதி கொடுக்கிற சவுதி அரசு ஷிர்க் பிரச்சாரம் செய்பவர்களென்றும் கூற வஹாபிகள் யாருக்காவது நெஞ்சுரம் உண்டா?
9. மவ்லீது மஜ்லிஸுகளும்,
திக்ரு மஜ்லிஸுகளும், தமிழ்நாட்டிலும்,
கேரளாவிலும் நடக்கின்ற செயலென்று கூறும் வஹாபிகள் சவுதியின் ஹரம் எல்லைப்பகுதிகள் உட்பட அனைத்து தினங்களிலும், மவ்லீத், திக்ரு மஜ்லிஸுகள் நடைபெறுகிறது.
இதை தடை செய்ய சவுதிகளின் பணம் வாங்கி தமிழகத்தில் தீன் பணி செய்கின்ற இனிய மார்க்கம் கூறுகின்ற வஹாபிகளுக்கு ஏன் முடியவில்லை?
10. மரண வீட்டில் மூன்று தினம் குறிப்பிட்ட உணவு தயார் செய்வதும் எல்லோரும் ஒன்று கூடுவதும், தடை செய்யப்பட்ட இடங்கள் சவுதியில் உண்டா? இவை பித்அத்தான செயலென்று கூற சவுதிகளின் பணம் வாங்கி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் தொண்டைகிழிய சொற்பொழிவுகள் நடத்துகின்ற வஹாபிகள் யாரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்?
11. பிறைகாணத் தேவையில்லை.
கணக்கு கூட்டி உறுதி செய்தால் போதும் நோன்பும் பெருநாளும் கடைபிடிக்கவாமென்று கூறுகின்ற ஹிலால்காரர்களும், ஹிஜ்ராகாரர்களும் சவுதிக்கு ஹிஜ்ரா சென்று இந்த வாதங்களை அங்கே எடுத்து கூறி அவர்களை திருத்த வஹாபிகள் தயாராவார்களா?
12. ஹஜ்ஜிற்க்கு வருகின்ற
30 லட்சத்திற்கும் அதிகமான மக்களில் 5 லட்சம் ஜனங்களைத் தவிர மீதமுள்ள அனைவரும் முஷ்ரிக்குகளென்று கேரளத்தில் கூறி விவாதம் ஏற்படுத்திய அந்த வஹாபி சவுதியில் வைத்து இதை கூற தயாரா?
13. ஜின் ஷைத்தான் போன்ற படைப்புகள் இல்லையென்றும் அவர்களுடைய செல்வாக்கு மனிதனில் ஏற்படாது என்றும் அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட,
கட்டுக்கதைகளென்றும்
ஸிஹ்ர் என்ற ஒரு செயலை கிடையாதென்றும் சவுதியில் வைத்து கூற கடல் தாண்டி சென்ற வஹாபிகள் தயாராவார்களா?
14. கப்ரு ஜியாரத் கூடாது என்று கூற தமிழகத்திலே வஹாபிகள் (ஸலபிகள்) தயாராவார்களா? ரியாத்திலும் மற்றும் பிரபலமான கப்னுஸ்தான்களில் வெள்ளிகிழமை ஜும்ஆவிற்கு பிறகு ஜியாரத்திற்காக அதிகமான நபர்கள் வருவதும் அவர்களுக்கு பல முதவ்வாக்கள் (ஸலபி பண்டிதர்கள்) குர்ஆனும், தண்ணீரும் கொடுப்பது பித்அத் தென்றும் ஷிர்க்கென்றும் முத்தவ்வாக்களுக்கு ஏன் வஹாபிகள் சொல்லி கொடுக்காமல் இருக்கிறார்கள். இவ்விதம் தமிழக வஹாபிகளுக்கும் சவுதி சலபிகளுக்கு மிடையில் நிறைய விஷயங்களில் மலைப்போன்ற முரண்பாடுகளை பார்க்க முடியும். ஆனால் இதை தமிழக மக்கள் அறியாமல் இருக்கிறார்கள். எனவே நம் ஊர்களில் தவ்ஹீத் பிரச்சாரம்? செய்பவர்களோடு மேற்கூறிய விஷயங் களைப்பற்றி கேளுங்கள்.