சர்வதேச காஃபி தினம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#சர்வதேச_காஃபி_தினம்
(International coffee day)
சர்வதேச காஃபி தினம் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
உஸ்மானிய பேரரசின் கீழ் இருந்த சகல coffee shopsகளிலும் ஒர் அரபு வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
"ஒவ்வொரு நாளும் எமது கடைகளை பிஸ்மிலுடன் திறக்கின்றோம். ஹஸ்ரத் அபுல் ஹஸன் ஷாதுலி எமது தலைவராவர்."
"her seherde besmele ile açılır dükkanımız, hazreti Şeyh Şazilidir pirimiz üstadımız"
ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் இமாம்_அபுல்_ஹஸன்_ஷாதுலி றஹ்மதுல்லாஹ் அவர்களே காஃபியை அறிமுகம் செய்ததாக பலரும் கூறுகிறார்கள். அவர்களை கௌரவிப்பதற்காகவே உஸ்மானிய ராஜ்யத்தின் coffee_shopsகளின் உரிமையாளர்கள் இந்த வாசகத்தை தமது கடைகளில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
தகவல்_Fazhan_Nawas