Sirajudheen Ahsani
எழுத்தாளர்

AP உஸ்தாதை வரவேற்க தயாராகும் அந்தமான்.

போர்ட் பிளேர் |
ஸமஸ்த நூற்றாண்டு விழாவிற்கான பிரச்சாரம்
அந்தமான் தீவுகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விம்பர்லிகஞ்ச் கனியாபுரம் மர்கஸ் அல்லாமா ஃபழ்லுல் ஹக் கைராபாதி கல்வி ஸ்தாபனத்தின் பல்வேறு நிகழ்வுகள் மற்றும்
ஸமஸ்த நூற்றாண்டு விழா பிரச்சார
நிகழ்ச்சிகளுக்காக அந்தமான் வரும் இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள வரவேற்க சுன்னத் வல் ஜமாத் செயல் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

ஏபி உஸ்தாதை வரவேற்கும் பலகைகள் மற்றும் போஸ்டர்கள் அந்தமானின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தமானின் சுன்னத் வல் ஜமாத்தினர் இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக கேரளாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் சந்ததியினர் ஆவார்கள்.
மேலும் அவர்களின் முன்னோடிகளின் நினைவைப் புதுப்பிக்க,
முந்தைய தலைமுறையினரின் மூதாதையர் வீடுகளின் பெயர்களில் காந்தபுரம் உஸ்தாதின் வருகைக்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவிலிருந்து அங்கு வந்த குடும்பங்களின் பெயரில்தான் பிரச்சார, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது..