ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 6
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_6....
#மறுமை_நாளில்_மனிதனுக்கு_வேண்டி
#பரிந்துரை_செய்யும்_நோன்பு...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோன்பு மறுமை நாளில்
மனிதனுக்காக பரிந்துரை செய்யும்.
( أَيْ رَبِّ إِنِّي مَنَعتُهُ الطَّعَامَ وَ الشَّهَوَاتَ بِالنَّهَارِ فَشَفَّعْنِي فِيهِ )
இறைவா!
நான் இவரின் உணவையும், பகலில் உணர்வையும் தடுத்துவிட்டேன். எனவே, இவரின் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக! என்று நோன்பு சொல்லும். அறிவிப்பாளர்:- உபைதுல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஹாகிம், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-298