விவசாயிகளுக்கு அநீதி இழைக்காதீர்
விவசாயிகளுக்கு_அநீதி இழைக்காதீர்.
உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி.
இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும், நேர்மையின் இலக்கணமான சகாயம் என்பவர் ஒரு மேடையில் விவசாயிகள் பற்றி இவ்வாறு கூறினார்.
“நான் ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அங்கே கோவணம் கட்டியிருந்த விவசாயி ஒருவரைப் பார்த்து நான் அவரோடு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அவர் அருகில் சென்றேன். அவரோ ‘அய்யா, நான் கோவணம் கட்டி உங்க கூட நின்றால் நன்றாகவா இருக்கும்’ என்றார். அவரை அழைத்து நான் உங்களோடு புகைப்படம் எடுப்பதை மிக கௌரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன் எனக் கூறி அவரோடு எடுத்த புகைப்படத்தை, தனது அலுவலக முகப்பில் பெரிய அளவில் மாட்டினார்.
காரணம் கேட்ட சக அலுவலர்களைக் கண்டு, இந்நாட்டிற்கு சோறுபோடும் விவசாயியை கௌரவப்படுத்தாமல், நான் வேறு எவர்களை கௌரவப்படுத்த?” என்றார்.
ஆனால் அப்படிப்பட்ட விவசாயிகளின் இன்றைய நிலை என்ன? லட்சகணக்கான விவசாயிகள் தங்கள் டெல்லியில் வந்து போராட்ட களத்தில் குதிக்க காரணம் என்ன? இந்த அரசாங்கம் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கிறதா? இல்லை பறிக்கிறதா? நாட்டிற்கு சோறு போடும் இவர்களின் உரிமைகளை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களை திருப்திபடுத்த கொடூரமான சட்டங்களை கொண்டு வரக் காரணம் என்ன?
அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் நிலை மோசமாகி விட்டது. நாளுக்கு நாள் அவர்களின் கஷ்டங்கள் மேலும் அதிகரித்து கொண்டே போகிறது.
நமக்கு 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய் விட்டது. நாம் நன்றாக இருக்கிறோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.
இப்போது ஆரோக்கியம் இல்லாத உணவுதான் கிடைக்கிறது. இன்று விவசாயிகளை கவனிக்காவிட்டால் அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலை ஏற்படும்.
நாம் வல்லரசாக மாறுவோம் என்ற கனவில் மிதக்கிறோம். முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும். விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல, அவசரமாகவும் தீர்வு காணப்பட வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த வேளாண்மை மசோதாவை விவசாயிகளின் நலன் மீது அக்கறை கொண்ட எல்லா நபர்களும் எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.
தெலங்கானா முதலமைச்சரும், தெலங்கான ராஷ்ட்ரிய சமிதிக் கட்சியின் தலைவருமான சந்திரசேகராவ் மத்திய அரசு கொண்டு வர துடிக்கும் வேளாண்மை மசோதாவுக்கு எதிராக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தமது கட்சி எம்பிக்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.*
*மேலும் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:*
*பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டுவரும் வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு பெரும் அநீதியை இழைக்கக் கூடியவை. விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விற்க இந்தச் சட்டங்கள் வழிவகுப்பதாக கூறுகின்றனர். ஆனால், உண்மையில், வியாபாரிகள்தான் எங்கு வேண்டுமானாலும் சென்று வாங்குவதற்கு இந்தச் சட்டம் உதவும். சிறு விவசாயிகள் தங்களது குறைந்த உற்பத்தியை, பெருமளவு போக்குவரத்துச் செலவு செய்து வெகுதொலைவு சென்று விற்க முடியுமா? மத்திய அரசின் இந்தச் சட்டங்கள் மேலாக இனிப்புப் பூசப்பட்ட கசப்பு மாத்திரைகள். யாருடைய நலனுக்காக இறக்குமதி வரியில் 35 சதவீதம் குறைக்கப்பட்டது? நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் போது அவர்கள் எப்படி அத்தகைய முடிவை எடுத்தார்கள்? சோளம் நாட்டில் பெரிய அளவில் பயிரிடப்படுகிறது. சோளத்தின் இறக்குமதி வரியை நாம் குறைத்தால், என்ன நடக்கும்? விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான இந்தச் சட்டங்களை அனைத்து வகையிலும் கடுமையாக எதிர்க்க வேண்டும்”*
*இவ்வாறு சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.*
*மத்தியரசை திணறடிக்கும் விவசாயிகள் போராட்டம்.*
*அரசின் விவசாய நலன்களுக்கு எதிரான வேளாண் சட்டம் இயற்றப்பட்ட செப்டம்பர் மாதத்திலிருந்து அதனை ரத்து செய்திடக்கோரி பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்து தங்களின் போராட்டங்களை விவசாயிகள் வடிவமைத்தனர்.*
*ஆனால், அவர்களின் கோரிக்கைகள் அரசின் செவிகளுக்கு விழாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் டிராக்டர்களிலும், டிரக் வாகனத்திலும் போதிய அடிப்படை தேவைக்கான தயாரிப்புகளுடன்என்று தலைநகர் டெல்லியினை முற்றுகையிட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்வானது, குளிர்காலத்தில் ஏற்படும் பனி மூட்டத்தால் மறையும் சூரியனை மற்றொருமுறை மறைய வைப்பதற்கு ஒப்பானது.*
*29 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட இந்திய தலைநகரத்தை இணைக்கும் அனைத்து வடமாநில எல்லையும் தனது வழமையான போக்குவரத்து சப்தங்கள் எழாமல் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற புரட்சி கோசங்களை மேலெழுகின்றது. தங்களுக்கே என்ற தனித்துவமான, வண்ணமயமான தலைப்பாகைகள் மற்றும் நீண்ட, பாயும் தாடிகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நகரின் எல்லைகளில் முற்றுகையிட்டுள்ளனர்.*
*புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் நெடுஞ்சாலைகளைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றனர், புதிய வேளாண் சட்டங்களாவது அவை கார்ப்ரேட் சுரண்டலுக்குத் தான் வழிவமைக்கும் என்ற ஒட்டுமொத்த ஒற்றைக் காரணத்திற்காக. இத்துணைக்கும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதுகாப்பு படையினரின் தடுப்புகள். அரசின் சாலை பெயர்த்தல், கண்ணீர்ப்புகை, தடியடி மற்றும் தண்ணீர் பீரங்கிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.*
*இப்போராட்டங்கள் குறித்து பஞ்சாபின் லூதியானா நகரில் இருந்து பயணமான 31 வயது கல்ஜீத் சிங் என்பவர் கூறும்போது, “மோடி எங்கள் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க விரும்புகிறார், நாங்கள் பல தலைமுறைகளாக எங்கள் வாழ்க்கையை விட விலைமதிப்பற்றதாக கருதும் நிலத்திற்கு எங்கள் இரத்தத்தையும் வியர்வையையும் கொடுத்து காப்போம்." மற்றொரு விவசாயியான அன்மோல் சிங் கூறும்போது: ”இப்புதிய சட்டங்கள் விவசாயிகளின் நிலத்தை பெரிய நிறுவனங்களுக்கு ஒப்படைத்து நிலமற்றவர்களாக மாற்றுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் வெளிப்பாடாகும்.*
*"ஏழை விவசாயி பசியால் இறக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார், இதனால் அவர் தனது பணக்கார நண்பர்களின் வயிற்றை நிரப்ப வேண்டும் எனக் கருதுகிறார்," அவருடைய இத்தகைய மிருகத்தனமான போக்கை அமைதியாக எதிர்த்துப் போராடவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்." என்றார்.*
*“கவுர்” என்னும் விவசாயி கூறும்போது "எங்கள் நாடு ஒரு பூந்தோட்டத்தினை போன்றது, அதில் மோடி தனது காவி நிறத்தில் அது இருக்க விரும்புகிறார். அதைச் செய்ய அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அந்த மனநிலையை எதிர்த்து நான் இங்கு வந்துள்ளேன், ” என்று விளாசியுள்ளார்.*
*நிறுவனங்களின் சுரண்டல்!!*
*வேளாண் சட்டங்களாவது: குறைந்தபட்ச உத்தரவாத விலையில் தானியங்களை வாங்குவதை அரசு நிறுத்திடவும் , காப்ரேட் கம்பெனிகள் தாங்கள் நிர்ணயம் செய்யும் விலைகளிலே விவசாய பொருட்களை கொள்முதல் செய்யவும் , அதன் மூலம் கொள்ளை லாபம் பார்க்க வழிவகைசெய்யும் என அச்சப்படுகின்றனர். மோடியின் கூட்டாட்சி கொள்கைகளாவது சிறுபான்மை மக்களிடம் மனக்கசப்பையும் , தலித் மக்களிடம் வெறுப்பையுமே ஈர்த்துள்ளன, அதுபோலவே தற்போது விவசாயிகள் பாஜகவை “சர்வாதிகார நடத்தையுடையவர்கள்” என்று விமர்சிக்கின்றனர்.*
*விவசாயிகளிடம் இந்த சட்டங்கள் அதிர்ப்தியை அதிகப்படுத்தியுள்ளன, சிறந்த பயிர் விலைகள், கூடுதல் கடன் தள்ளுபடிகள் மற்றும் நீர்ப்பாசன முறைகள் ஆகியவற்றிற்கான உந்துதலில் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதாகவும், முகவர்களை அழித்து மொத்தமாக பெருநிறுவனத்தையே முழுமையாக சார்ந்திருக்கவும், அவர்களின் நியதிபடியே தங்களின் விவசாயத்தை அமைத்துக் கொள்ளவும், இன்னும் சொல்லப் போனால் விவசாயிகள் பெருநிறுவனங்களுக்கு அடிமையாக செயல்படவே இச்சட்டம் வழிவகை செய்கின்றது என்பதே விவசாயிகளின் வாதம்.*
*ஷாஹின்பாக்கை நினைவுப்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்.*
*குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக டெல்லியை மையம் கொண்ட ஷாஹின்பாக் போராட்டக்களத்தை நினைவுபடுத்தும் விதமாக விவசாயிகளின் முற்றுகை போராட்டம் இருக்கின்றது. பிபிசி நிறுவனத்தால் சிறந்த 100 ஆளுமை என வருணிக்கப்பட்ட 82 வயதைக் கொண்ட பல்கீஸ் பானு விவசாயிகளுக்கு ஆதரவளித்திட களத்திற்கு வரும்வழியில் தடுக்கப்பட்டார் , இதிலிருந்து இப்போராட்டக்களத்தின் வெப்பத்தினை உணரமுடியும்.*
*இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தினர் விவசாயிகளே, விவசாயிகளின் இப்போராட்டமானது மோடியின் நிர்வாகத்தையும், அவர்தம் கூட்டாளிகளையும் திணறடித்துக் கொண்டிருக்கின்றது. விவசாயிகளின் இத்தகைய எழுச்சியானது சாதாரண குடிமக்களின் பரவலான ஆதரவை பெற்றுக் கொண்டே வருகின்றது. மோடியும் அவரது கூட்டாளிகளும் புதிய சட்டங்களைப் பற்றிய விவசாயிகளின் அச்சங்களைத் தீர்க்க முயற்சித்தனர்.*
*அவரது பாஜக கட்சித் தலைவர்கள் விவசாயிகளை "வழிகெட்டவர்கள்" மற்றும் "தேசவிரோதிகள்" என்றும் பெயர்கொடுத்தனர், பொதுவாக பாஜகவையும் அவர்தம் கொள்கைகளையும் விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படும் ஒரு முத்திரை அதனை ஒருபொருட்டாக போராட்டக்காரர்கள் கருதவில்லை என்பது அவர்களில் போராட்டங்களின் வாயிலாக பிரதிபலிக்கின்றது.*
*தற்போது போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பலகட்ட முயற்சிகளை மத்திய பாஜக அரசு செய்து கொண்டு வருகிறது, ஆனால் விவசாயிகள் தங்களின் கோரிக்கையான புதிய வேளாண் சட்டங்களை அமைச்சரவையினைக் கூட்டி நீக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.*
*தற்போதைய ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தங்களின் எதிர்கால தலைமுறையினரின் சமூக, பொருளாதார தடைகள் வீழ்ச்சி அடைந்திடக் கூடாது என்ற உணர்வுக்காகவே அன்றி வேறில்லை! இவைதான் அவர்களின் உள்ளங்களில் ஆழமாக ஓடுகின்றன. அதனால் தான் ஒட்டுமொத்த விவசாயிகளும் தங்களின் ஒருமித்த குரலாக “இன்குலாப் ஜிந்தாபாத்“ என்று முழங்குகின்றனர்.*
*விவசாயிகளின் நலன் மீது அக்கறை கொண்ட மார்க்கம் இஸ்லாம்..*
*இஸ்லாமிற்கு முந்தைய பாரசீக மற்றும் ரோமப் பேரரசுகளில் நிலம் அனைத்தும் அரசனுக்கு உரிமையானதாகவும் அதில் வேலை செய்வோர் கொத்தடிமைகளாகவுமே இருந்தன. அவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டுமே அவர்களுக்குரிய பலனாக இருந்தது. ( ஜுர்ஜீ ஜைதான். இஸ்லாமின் நாகரீக வரலாறு)*
*இஸ்லாமிய அரசுகள் விவசாயிகளை பாராட்டின. மக்களை தூண்டின.*
*விவசாயிகளின் மகசூலில் பெரும்பான்மையானதை விவசாயிகளுக்கே வழங்கின.*
*உமர் (ரலி) காலத்தில் முஸ்லிம்கள் வெற்றி கொண்ட நிலங்களில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடமே விடப்பட்ட அவற்றை எடுத்துக் கொள்ள முஸ்லிம் வீர்ர்கள் அனுமதிக்கப் படவில்லை.*
*விவசாயம் எந்த அளவு பெருமைக்குரியதோ அதே அளவு சிரமத்திற்குரியதும் கூட*
*மகசூலுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.*
*அதிக நாள்கள் காத்திருக்க வேண்டும்.*
*வெள்ளம் பூச்சிகள் போன்ற ஆபத்துக்கள் அதிகம்.*
*அதனால் விவசாயிகளை ஆதரிக்க வேண்டியது நல்ல அரசுகளின் கடமை.*
*விவசாயத்தையும் விவசாயிகளையும் காத்த உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் . அரசாங்கத்தின் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு கடன் வழங்க கூறினார். அவர் மாற்றுமத்த்தை சார்ந்தவராக இருந்தாலும்.*
*الخليفة العادل الراشد عمر بن عبد العزيز يقوم بتقديم القروض الحسنة للعاملين في الارض ولو كانوا من أهل الذمة لما في ذلك من مصلحة للمسلمين وذلك عندما كتب الى واليه عبد الحميد بن عبد الرحمن الذي بعث اليه يستشيره بشأن التصرف في فضول بيت المال - قال: (أنظر من كانت عليه جزية فضعف عن أرضه فأسلفه ما يقوى به على عمل أرضه فإنا لانحتاجهم لعام ولا لعامين)*
*விவசாயிகளுக்கு அநீதி இழைக்க கூடாது என கலீஃபாக்களுக்கு வஸியத் செய்த நாயகம் ஸல் அவர்கள்...*
*(وصى رسول الله (صلى الله عليه واله) عليا (عليه السلام) عند وفاته فقال : يا علي لا يظلم الفلاحون بحضرتك ولا يزاد على ارض وضعت عليه ولا سخرة على مسلم يعني الاجير)*
*உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் தன் ஆட்சியின் கீழ் உள்ள கவர்னருகளுக்கு இவ்வாறு அறிவுரை செய்தார்கள்.*
*[قال عمر بن الخطاب: (اتقوا الله في الفلاحين .. )]*
*விவசாயிகளின் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.*
*மக்களின் பசியை போக்க அயராது உழைக்கும் பாவம் விவசாயிகளை வஞ்சிக்காதீர்கள், அநீதி இழைக்காதீர்கள், அவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள், அவர்களை மதியுங்கள், அவர்களை பாதுகாத்திடுங்கள், அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், இறைவன் நம் ஆட்சியாளர்களுக்கு மனதில் இரக்க குணத்தை ஏற்படுத்துவானாக!....*
*ஆக்கம்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*