ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 23
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_23....
[சுவனத்தின் விஷேட அறைகளுக்குச் சொந்தக்காரர்களாகலாம்:]
عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( إِنَّ فِي الْجَنَّةِ لَغُرَفًا يُرَى ظُهُورُهَا مِنْ بُطُونِهَا وَبُطُونُهَا مِنْ ظُهُورِهَا ” . فَقَامَ إِلَيْهِ أَعْرَابِيٌّ فَقَالَ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ” هِيَ لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلَّهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ) رواه الترمذي بسند حسن
சுவனத்திலே விஷேட அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் வெளிப்பகுதியை உள்ளிருந்து பார்க்கலாம். உட்பகுதியை வெளியிருந்து பார்க்கலாம்” என நபியவர்கள் கூறியதற்கு ஒரு நாட்டுப் புற அரபி எழுந்து, “அது யாருக்குரியது…? யா ரஸூலல்லாஹ்!” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “யார் நல்ல முறையில் தமது வார்த்தைகளை அமைத்துக் கொள்கறாரோ…! யார் உணவளிக்கிறாரோ…! யார் தொடர்ந்தேர்ச்சியாக நோன்பிருக்கிராரோ…! மேலும் மக்கள் உறங்கும் நேரத்தில் இரவில் எழுந்து நின்று வணங்குகிறாரோ…! அவருக்குத் தான்” எனப் பதிலளித்தார்கள்