ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 24

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 24

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_24....

#அல்லாஹ்வின்_ஆனந்தம்.

அடியார்கள் பகற்காலங்களில் நோன்பிருந்து , இராக் காலங்களில் தொழுது வரும்போது , அவர்களை மலக்குகளுக்கு காட்ட வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றான் . ” மனித குலத்தைப் படைக்க வேண்டாமென்று கூறினீர்களே ! அவர்களைப் பார்த்தீர்களா ? என்றைய தினம் லைலத்துல் கத்ரு என்று தெரியாமல் , அதைத் தேடுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் தெரிந்திருந்தால் எவ்வளவு ஈடுபாடு கொள்வார்கள் .
பூமிக்குச் சென்று அதை நேரில் கண்டு வாருங்கள் ” என்று பெருமையுடன் இறைவன் கூறுகிறான் .
இக்கருத்தை பிஇத்னி ரப்பிஹிம்
( அவர்கள் இறைவனின் உத்தரவின் பேரில் ) என்ற வசனம் சுட்டுகிறது .
இவ்வாறே திக்ரு மஜ்லிஸ் நடைபெறும் போது அதில் கலந்து கொள்ளவும் மலக்குகள் வருகை புரிகிறார்கள் .
குர்ஆன் ஓதப்படும் அவையிலும்
அவர்களின் வருகை நிகழுகிறது .

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நவின்றார்கள் :

அல்லாஹ்வின் இல்லங்களில் ஒரு இல்லத்தில் சில மக்கள் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்கள் . அதை தங்களுக்கிடையில் பாடம் நடத்திக் கொள்கிறார்கள் . அப்போது அவர்களை அமைதி தழுவுகிறது . அவர்கள் மீது அருள் இறங்குகிறது . அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள் .
அவர்களைப் பற்றி அல்லாஹ் தன்னிடம் இருப்பவர்களிடத்தில் பெருமையாகப் பேசிக் கொள்கிறான்

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா ( ரளி )

நூல் : முஸ்லிம்