ஆதாரங்களின் வெளிச்சத்தில் மீலாத் விழா
மீலாத் மவ்லித்

ஆதாரங்களின் வெளிச்சத்தில் மீலாத் விழா

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ஆதாரங்களின்_வெளிச்சத்தில்_மீலாது #விழா....

கழிந்த தொடரில் மவ்லித், மீலாது விழா முஃமின்கள் ஏன் நடத்துகிறார்கள், நடத்துவதின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாம் அலசினோம்.

சமீப காலமாக சமூகத்தில் மிகப்பெரிய கொள்கை குழப்பங்களை ஒரு கூட்டத்தினர் ஏற்படுத்தி சாதாரண மனிதர்களின் ஈமானை பாழ்ப்படுத்துகின்ற வேலைகளை செய்கின்றனர்.

மவ்லித், மீலாதுவிழாக்கள் புதிதாக தொடங்கியதுப் போன்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளனர்.

அனைத்து நாடுகளிலும் வாழும் முஸ்லிம் பெருங்குடி மக்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தில் அல்லாஹ்வின் அருட்கொடையாய் அகிலத்தில் அவதரித்த அண்ணல் (ﷺ)அவர்களின் பிறப்பில் நன்றியும், மகிழ்ச்சியும் கொண்டு அவர்கள் வரலாறு கூறும் மவ்லித் ஓதுகின்றனர்,மீலாது விழாக்கள் மிக சிறப்பாக கொண்டாடுவதை மீடியாக்களின் உதவியுடன் மிக சுலபமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மீலாது விழாக்களுக்கும், மவ்லித் மஜ்லிஸுகளும் பண்டு தொட்டே நடைபெற்று வருகின்ற புண்ணியம் நிறைந்த அழகிய செயல்களாகும்.

இறையச்சமும், இறையவன் தூதர் அண்ணல் (ﷺ) அவர்கள் மீது ஈடிணையற்ற நேசமும் கொண்ட இமாம்கள் மீலாது விழாக்களையும், மவ்லித் மஜ்லிஸ்களையும் ஆதரித்தும் செயல்படுத்தியும் வந்துள்ளனர்...

மேதை ஜலாலுத்தீன் ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்." ஒரு வீட்டிலோ, பள்ளிவாசலிலோ, ஊரிலோ மவ்லித் ஓதப்பட்டால் அவ்விடத்தை மலக்குகள் சூழ்ந்திருப்பர்.அவர்களுக்காக இறைஞ்சுவர்.மவ்லித் ஓத காரணமானவருக்கு அல்லாஹ் தன் அருளைச் சொரிவான்.மவ்லித் ஓதப்படும் வீட்டை துன்பங்கள், துயரங்களிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்"... . .

மேலும் இமாம் ஸுயூத்தி (ரஹ்) அவர்களிடம் ரபீஉல் அவ்வலில் நடத்தப்படும் மவ்லிதுகள் பற்றி கேட்கப்பட்ட போது " சிலர் கூடி இருந்து திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதுகின்றனர்.பிறகு திரு நபி(ﷺ)அவர்களின் பிறப்பின் போதும் மற்றும் நடைபெற்ற அற்புத நிகழ்வுகளை சொல்கின்றனர்.இறுதியாக எல்லாரும் உணவருந்திப் பிரிகின்றனர்.இப்படிச் செய்வதில் தவறேதுமில்லை. மட்டுமல்ல! இதனைச் செய்கிறவர்களுக்கு நற்கூலியும் கிடைக்கும்.ஏனெனில் அவர்கள் நபி(ﷺ)அவர்களை கண்ணியப்படுத்துவதோடு அவர்களின் பிறப்பிற்காக தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றனர்.

ஸெய்யித் அஹ்மது இப்னு ஸெய்னீ தஹ்லான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்." மவ்லிதில் நபிகள் நாயகம் (ﷺ)அவர்கள் பிறந்த செய்தியை படிக்கும் போது ஜனங்கள் எழுந்து நின்று கண்ணியப்படுத்தும் வழக்கமிருக்கிறது.அது மிக்க நல்ல செயலும், முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியதும், மேதைகள் பலரும் செய்த செயலுமாகும்.

திருநபி (ﷺ) அவர்கள் பிறந்த நாளில் மகிழ்ச்சி தெரிவித்த அபூலஹபிற்கு நரகத் தண்டனையிலிருந்து குறைவு கிடைக்கிறது என்ற நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஹாபிழு ஷாம் ஷம்ஸுத்தீன் முஹம்மத் இப்னு நாஸிர் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

" வான்மறை அல்குர்ஆனில் தெள்ளத் தெளிவாக சாபம் கொடுக்கப்பட்டவனும், நரகிலேயே எக்காலமும் தங்க வேண்டியவனுமான அபூலஹபுக்கு ஒரு ஆண் குழந்தை என்ற நிலையில் நபியின் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியடைந்ததற்காக திங்கட்கிழமை தோறும் தண்டனை குறைந்து குளிர்பானமும் கிடைக்கிறது.

ஆனால் வாழ்வின் அனைத்தையும் அண்ணல் நபி(ﷺ) அவர்களுக்கே சமர்ப்பித்து முஃமின்களாகவும் மரணிக்கின்ற ஸுன்னிகளுக்குக் கிடைக்க போகும் நற்பேறுகளுக்கு அளவே இல்லை.

இமாம் யாபிஈ அல்யமனீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்." மவ்லிதுக்காக ஒருவர் சகோதரர்களை அழைத்து உணவு வழங்குவதோடு மற்றும் தானதர்மங்கள் செய்தால் அவரை கியாமத் நாளில் ஸித்தீகீன்கள், ஸாலிஹீன்கள், ஷுஹதாக்களுடன் அல்லாஹ் எழுப்புவான். அருஞ்சுவனத்தில் அவரை அமர வைப்பான்.

இமாம் ஸகாவீ (ரஹ்) அலைஹி அவர்கள் சொல்கிறார்கள்." மூன்றாம் நூற்றாண்டில் மவ்லித் கொண்டாட்டங்கள் தொடங்கின. பின்னர் உலகின் சிற்றூர், பேரூர்களில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் மவ்லித் நடத்த தொடங்கினர். திருநபி(ﷺ)அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறி, பலவித தானங்கள் செய்து மவ்லிதை கொண்டாடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் ஆண்டு முழுவதும் நன்மை பெறுகின்றனர்.

இப்னுல் ஹாஜ் அல்மாலிகி (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.
பெருமானார் நபி (ﷺ)அவர்களை மிகப்பெரிய பேறாக வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக ரபீஉல் அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாம் நாள் திங்கட்கிழமை அதிகமான நற்செயல்கள் செய்தல் கட்டாயமாகும்..

"நபி (ﷺ)அவர்கள் பிறந்த இரவில் மவ்லித் ஓதுவதும், மகிழ்ச்சி கொள்வதும் அப்பெருமகனாரை கண்ணியப்படுத்துவதாகும்"
(அத்துரருஸ்ஸனிய்யா)

இப்னுல் ஆப்தீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் பிறந்த மாதத்தில் சிறப்பு மிகு மவ்லித் நிகழ்ச்சிகள் நடத்துதல் புதிதாக உண்டான செயல்களில் மிக்க அழகியதாகும். முஃஜிஸத் _ அற்புத நிகழ்வுகளும் அதிகமான ஸலவாத்துச் சொல்தலும் கொண்ட பெருமானார் நபியுல்லாஹ் (ﷺ)அவர்களின் வரலாற்றைக் கேட்பதற்காக ஜனங்கள் கூட்டம் கூடுதல் இபாதத்துகளில் முக்கியமானதாகும்..

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நம்முடைய காலத்தில் உள்ள அழகிய பித்அத்துகளில் ஒன்று: ஒவ்வொரு வருடமும் நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் பிறந்த தினத்தில் செய்யப்பட்டு வரும் ஸதகாக்கள், நற்செயல்கள்,மகிழ்வை வெளிப்படுத்துதல் போன்றவையாகும்.இச்செயல்களைச் செய்பவர்களிடம் நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் மீது கண்ணியத்தையும், நேசத்தையும் ஏற்படுத்தும். மேலும் இச்செயல் அகிலத்திற்கோர் அருட்கொடையாக அண்ணல் நபியுல்லாஹ்(ﷺ) அவர்களைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுமாகும்....
(அல்பாஇத் அலா இன்காரில் பிதஃ)

ஹாபிழ் அப்துர்ரஹீம் இராகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

"வலீமா விருந்து, அன்னதானங்கள் எந்த சமயத்திலும் விரும்பத்தக்க செயலாக இருக்க நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் பிறந்த சிறப்பான மாதத்தில் மகிழ்வை வெளிப்படுத்துவதற்காக இவற்றை ஏன் செய்யக் கூடாது? எனவே இச்செயல் மக்ரூஹான பித்அத் ஆகாது எத்தனையோ விரும்பத்தக்க பித்அத்துகள் வாஜிபான பித்அத்துகளாக மாறியுள்ளன..*
(ஷரஹ் மவாஹிபுல்லதுன்னியா.)

முஹம்மது அலவி மாலிகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்..

மீலாது விழா கொண்டாடுவதும்,நபியுல்லாஹ்(ﷺ)
அவர்களின் வரலாற்றையும், அவர்களைக் குறித்துள்ள மத்ஹ் பாடல்களையும் கேட்பதற்காக கூட்டம் கூடுவதும், அன்றைய நாள் அன்னதானம் போன்றவை செய்தலும், மகிழ்வு கொள்தலும் ஆகுமானது என்று நாம் கூறுகிறோம்..

எகிப்திய முஃப்தி அலி ஜும்ஆ
அவர்கள் கூறுகிறார்கள்..

பெருமானார் நபி (ﷺ)அவர்களின் மவ்லித்_மீலாத் விழாக்கள் நடத்துதல் மிகச் சிறப்பான செயல். இபாதத்துகளில் மிக்க உயர்வானது. ஏனெனில் இச்செயல் நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் மீதுள்ள நேசத்தின் வெளிப்பாடு. நபியுல்லாஹ்(ﷺ) அவர்கள் மீதுள்ள நேசம் தான் இறை நம்பிக்கையின் அடிப்படையில் மிக மிக முக்கியமானது".

சவூதி அரேபியாவைத் தவிர உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் மீலாது தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து, அரசு சார்பிலே மீலாது விழாக்களும், மவ்லித் நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பான முறையில் நடைபெறுகின்றன.

*சவூதி அரேபியாவில் அரசு சார்பில் மீலாது விழாக்கள் நடத்தப்படவில்லையென்றாலும் மக்கா முகர்ரமா உட்பட பல்வேறு ஊர்களில் தனிப்பட்ட முறையில் மீலாது விழாக்களும், மவ்லித் மஜ்லிஸ்களும் நடைபெற்று வருகின்றன.*

*மக்கா திருநகரில் கண்ணியத்திற்குரிய முஹம்மது அலவி மாலிகி (ரஹ்) அவர்களுடைய மஜ்லிஸில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் மவ்லித் நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.*

*முஹம்மது அலவி மாலிகி (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பின், அன்னாருடைய புதல்வரின் தலைமையில் இந்நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.*

*(ஆண்டுதோறும் அங்கே நடைபெற்று வரும் மவ்லித் நிகழ்ச்சிகள் மற்றும் வாரந்தோறும் நடைபெறும் ஸலவாத்து மஜ்லிஸ்களின் வீடியோ தொகுப்புகளை யூ_ட்யூபில் காணலாம்.)*

*எனவே நபிபுகழ்பாடும் மவ்லிதுகளும், மீலாது விழாக்களும் புண்ணியம் சேர்க்கும் புனிதச் செயல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.*

*ஆனால் இன்றைக்கு இஸ்லாமின் கொள்கைகளிலும், செயல் பாடுகளிலும் தேவையற்ற சந்தேகங்களையும், வீணான விவாதங்களையும் உருவாக்கி குழப்பங்கள் வேண்டும் விளைவித்து வரும் வீணாய்போன ஒரு கூட்டத்தினரால் மவ்லிதுகள் மற்றும் மீலாது விழாக்கள் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருகிறது.*

*அல்லாஹ் அக்கூட்டத்தில் சேருவதை விட்டும் நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!..*

*வாழும் காலமெல்லாம் நபி புகழ் பாடி, அவர்கள் வழியில் நடந்து செல்லும் நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக....*

*சான்றோர்களை சார்ந்தும், மதித்தும், புகழ்ந்து வாழும் நற்பாக்கியத்தை எல்லாருக்கும் அல்லாஹ் வழங்கியருள்வானாக!*

*தகவல் : *M.#சிராஜுத்தீன் அஹ்ஸனி.*

*மீலாது_மவ்லித் சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் அரபு நாட்டு உலமாக்கள் அளித்த பதில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது உலமாக்கள் வாசித்து பயன்பெறுங்கள்....*

*سلسلة منشورات الرد على شبهات حول المولد النبوي الشريف*

*[1]. رد على شبهة احداث في دين الله ما ليس منه*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1701847966553894

*[2] الرد على شبهة هذا عبادة والعبادة تحتاج إلى توقيف من الشرع*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1701286073276750

*[3]. الرد على شبهة انها عبادة :وهي من الوسائل التي تُعين على اصل شرعي*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1700199283385429

*[4]. الرد على شبهة انه لم يفعلها الصحابة :اجتمع الصحابة لتكريم نبيهم ? وشكر الله عليه*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1699920833413274
*[5]. الرد على لماذا لم يأمر بالاحتفال به رسول الله*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1716649638407060
*[6] الرد على توزيع الحلويات*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1717282008343823
*[7] الاحتفال وسيلة شرط كمال الايمان*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1718585601546797
*[8] اول من احدثه من أهل السنة ملك اربل ابن بكتيكين*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1720618221343535
*[9] جواز الذبائح عند مقامات الاولياء لله تعالى*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1720359174702773
*[10] كتب ومؤلفات اهل السنة في المولد النبوي*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1718873914851299
*[11] لماذا نحتفلون بمولده لا بيوم وفاته ؟*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1721210124617678
*[12] لماذا لم يخصص الله عبادة في شهر ربيع الاول مثل رمضان او شهر ذي الحجة*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1721635001241857
*[13] الرد على اختلاف تاريخ مولده*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1722546061150751
*[14] . حقيقة المولد يفيد القدوم*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1723835554355135
*[15] تكريمه من الاشجار والاحجار*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1724725854266105
*[16] خطبة جمعة مقترحة بمناسبة يوم المولد النبوي الشريف*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1724038307668193
*[17] الرد على قولهم لو كان خيرا لسبقونا اليه*
https://web.facebook.com/photo.php?fbid=1730552180350139
*[18] تخفيف العذاب لابي لهب لانه اعتق جاريته فرحا بمولد محمد*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1730795713659119
*[19] الرد على انهم خالفوا الاجماع !!*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1730973773641313
*[20] الرد على ان رسول الله بلغنا اياه وامرنا فيه*
https://web.facebook.com/photo.php?fbid=1732065246865499&set=a.117960768275963.19475.100001861214723&type=3
*[21] الرد على ليس لنا عيد غير الفطر والاضحى*
https://web.facebook.com/zeyadaburajai/posts/1733930086679015
*[22] لماذا لا نصوم فيه كما فعل الرسول*
https://web.facebook.com/zeyadaburajai/posts/2054999951401297:77

[***] *اسئلة المسابقة للاحتفال بالمولد النبوي*
https://web.facebook.com/photo.php?fbid=1717539064984784&set=a.117960768275963.19475.100001861214723