குர்ஆன் வெளிச்சத்தில் மீலாத் விழா
ரபீஉல் அவ்வல் மாதம் நம்மை
வந்து அடைந்து இருக்கிறது.
அதை வரவேற்க அனைத்து விசுவாசிகளும்
தயாராகி விட்டனர்.
மா நபியின் பிறப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ரபீஉல் அவ்வல் மாதத்திலும்,அல்லாத நேரத்திலும் மகத்தான வெகுமதிகளை பெற்றுத்தரும் சங்கையான செயலாகும்.
இதற்கு இஸ்லாமிய ஆதாரங்கள் ஏராளமாக இருக்கிறது.
திருக்குர்ஆன் ஒளியில் மீலாத் விழா கொண்டாடுவதை சற்று ஆராய்வோம்...
அல்லாஹ் கூறுகிறான்:
﴿قُلۡ بِفَضۡلِ ٱللَّهِ وَبِرَحۡمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلۡيَفۡرَحُواْ هُوَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ﴾ [يونس: 58]
"முஃமின்கள் அல்லாஹ்வின் ஃபழ்லைக் கொண்டும், ரஹ்மத்தைக் கொண்டும் மகிழ்ச்சியடையட்டும்"
(சூரா யூனுஸ்.. 58)
இந்த வசனத்தில் கருணைக்கு இலக்கானவர் (ரஹ்மத்) கொண்டு நாடப்படுவது இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உலகம் முழுவதற்கும் அருட்கொடையாக நியமிக்கப்பட்டார்கள் என்று திருக்குர்ஆனே கூறியுள்ளது:
﴿وَمَاۤ أَرۡسَلۡنَـٰكَ إِلَّا رَحۡمَةࣰ لِّلۡعَـٰلَمِینَ﴾ [الأنبياء ١٠٧)
சூரத் யூனுஸில் வரும் இந்த வசனத்தை பல முஃபஸ்ஸிருகள் இப்படித்தான் விளக்கியுள்ளனர்.
இமாம் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகிறார்கள்...
قال الإمام السيوطي: وَأخرج أَبُو الشَّيْخ عَن ابْن عَبَّاس رضي الله عنه فِي الْآيَة قَالَ: فضل الله الْعلم وَرَحمته مُحَمَّد ﷺ قَالَ الله تَعَالَى (وَمَا أَرْسَلْنَاك إِلَّا رَحْمَة للْعَالمين) (الْأَنْبِيَاء الْآيَة ١٠٧)
(الدر المنثور للإمام السيوطي ٣٦٧/٤)
இமாம்_ஆலூஸி (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறுகிறார்கள்..
قال الإمام الألوسي: وأخرج أبو الشيخ عن ابن عباس رضي الله تعالى عنهما أن الفضل العلم والرحمة محمد ﷺ ..... والمشهور وصف النبي ﷺ بالرحمة كما يرشد إليه قوله تعالى: وَما أَرْسَلْناكَ إِلَّا رَحْمَةً لِلْعالَمِينَ [الأنبياء: ١٠٧]
(روح المعاني للإمام الألوسي ١٤١/١١)
இமாம்_அபூ_ஹய்யான் (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறுகிறார்கள்..
قال الإمام أبو حيان: وَقَالَ ابْنُ عَبَّاسٍ فِيمَا رَوَى الضَّحَّاكُ عَنْهُ: الْفَضْلُ الْعِلْمُ وَالرَّحْمَةُ مُحَمَّدٌ ﷺ.
(البحر المحيط للإمام أبي حيان ١٦٩/٥)
சூரத் யூனுஸின் 58 வது
இந்த வசனம் திருநபியைக்கொண்டு மகிழ்ச்சியடைவதற்கு கற்றுக்கொடுக்கிறது.
இருப்பினும் இந்த வசனம் மீலாத் விழாவுக்கு ஆதாரமாக எடுக்கலாமென ஏதாவது அறிஞர்கள் கருத்துச் சொல்லி உள்ளார்களா...?
என்ற சந்தேகத்தை நவீன வாதிகள் எழுப்புகிறார்கள்.
மேற்கண்ட விளக்கத்திலிருந்தே
வேறு எந்த ஆதாரமும் தேவையில்லாமல் மீலாத் விழாவுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது.
இருப்பினும் இந்த வசனம் திருநபி பிறவியில் மகிழ்ச்சி அடைவதற்கான ஆதாரம்தான் என்று அறிஞர் பெருமக்கள் சரியாக பதிவு செய்துள்ளனர்.
அதைக் குறித்து ஆராய்வோம்.
இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானியின் சீடரும்,
பிரமுக முஹத்திஸ்களில் ஒருவருமான இமாம் இப்ராஹிம்
நாஜி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பைக் கொண்டு நீங்கள் பறக்கத் பெறுங்கள்...
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பில் நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியதைக் கேளுங்கள்.
அல்லாஹ்வின் ரஹ்மத்தைக் கொண்டு விசுவாசிகள் மகிழ்ச்சியடையுங்கள் " [சூரத் யூனுஸ் 58]
قال الإمام الناجي: وتبركوا بولادته وافرحوا بها...واسمعوا قول ربكم تبارك وتعالى ان كنتم تسمعون ﴿قُلۡ بِفَضۡلِ ٱللَّهِ وَبِرَحۡمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلۡيَفۡرَحُواْ هُوَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ﴾ [يونس: 58]
(كنز الراغبين العفاة للإمام الناجي المتوفى 900 (96، 37)
இவ்வாறு நபிதின விழா கொண்டாடப்படுவதை நிரூபிக்கும் பல வசனங்கள் குர்ஆனில் உள்ளன.
◉ அல்லாஹ் கூறுகிறான்:
﴿وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ﴾ [الدحى ١١]
"நபியே, உங்கள் இறைவனின் அருட்கொடைகளை மக்களிடம் வெளிப்படுத்துங்கள்..
அல்லாஹ்வின் அருட்கொடைகளை எப்படி எடுத்துக் கூற வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்குக் கற்றுத் தருகிறது..
திருநபி பிறப்பு என்பது அல்லாஹ் நமக்கு கொடுத்த மாபெரும் அருட்கொடையல்லவா?
அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ரபீஉல் அவ்வல் மாதத்திலும்,
மற்ற பிற மாதங்களிலும்,
மேடை அமைத்தும்,
அது அல்லாமலும் மத்ஹ் பாடல்களைப் பாடுவதும், ஓதுவதும் அனுமதிக்கப்பட்டதாகும்.
◉ அல்லாஹ் கூறுகிறான்:
﴿إِنَّ الللَّهَ وَمَلَـٰۤىِكَتَهُۥ يُصَلُونَ عَلَى ّنَِّيِّۚ يَٰۤأَيُٕهَا ٱلَنَّذِ عَلَيْهِ وَسَلِّواِ تَسْلِيمًا﴾ [அல்-அஹ்ஸாப் 56]
"அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்கிறார்கள். எனவே நம்பிக்கையாளர்களாகிய நீங்களும் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள்..
இந்த வசனத்தை விளக்கி இமாம்_பைளாவி (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்வும் மலக்குகளும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி) அவர்களின் மகிமைகளையும் பெருமைகளையும் எடுத்துக் கூறுகிறார்கள். எனவே விசுவாசிகளாகிய நீங்கள் நாயகத்தின் பெருமைகளையும், மேன்மைகளையும் பற்றி கூறுவதற்கு மிகவும் கடமைப்பட்டவர்களாகும்.
امام البيضاوي: ﴿إنَّ اللَّهَ ومَلائِكَتَهُ يُصَلُّونَ عَلى النَّبِيِّ﴾ يَعْتَنُونَ بِإظْهارِ شَرَفِهِ وتَعْظِيمِ شَأْنِهِ. ﴿يا أيُّها الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ﴾ اعْتَنُوا أنْتُمْ أيْضًا فَإنَّكم أوْلى بِذَلِكَ وقُولُوا اللَّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ. ﴿وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ وقُولُوا السَّلامُ عَلَيْكَ أيُّها النَّبِيُّ.
◉ تفسير الامام البيضاوي (٣٨٥/١)
◉ البحر المديد للامام ابن عجيبة (٤٥/٤)