மாயிதாவும் மீலாதும்
..........#மாயிதாவும்_மீலாதும்........
நபி ஈஸா அவர்கள் உணவு நிறைந்த ஒரு (மாயிதா) மரவையை வானிலிருந்து இறக்கி தந்து தமது சமுதாய மக்களுக்கு அருள்பாலித்திட வேண்டுமென
அல்லாஹ்விடம் கையேந்தினார்கள்.
உணவு தட்டு இறங்கும் தினத்தை சிறப்பு செய்வதற்காக அந்நாளை பெருநாளாக கொண்டாடி மகிழ்வோம் என்றும் அல்லாஹ்விடம் கூறினார்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று அல்லாஹ் சுவைமிகு உணவு வகைகள் நிறைந்த மரவையை அனுப்பி வைத்தான்.
இந்நிகழ்ச்சியை அருள்மறை அல்குர்ஆன் சொல்கிறது..
قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ
மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
மாயிதா_114...
قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்”
என்று கூறினான்.
மாயிதா_115....
#இவ்விறை_வசனங்கள்...
________________________________
1_ அருட்கொடைகள் கிடைத்த தினத்தை பெருநாளாக கொண்டாட வேண்டும்...
2 _ மனித சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த வேண்டும்..
3_ அல்லாஹ் கனிந்து வழங்கிய அருட்கொடைகளை பெற்று கொண்ட பின்னர் அவனுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தால் கடுமையான வேதனைகளுக்கும்,
சோதனைகளுக்கும், தண்டனைகளுக்கும் படைத்தவன் உள்ளாக்குவான் என்ற செய்தியை மனித சமூகத்திற்கு தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன..
அல்லாஹ்வின் அருட்கொடையாக ஒரு உணவு தட்டைப் பெற்றுக் கொண்டதற்காக நன்றி செலுத்த வேண்டும், அந்நாளை பெருநாளாக கொண்டாட வேண்டும் எனும் போது
ரஹ்மத்துல் ஆலமீன் முழு உலகிற்கும் அருட்கொடையாக அல்லாஹ் வழங்கிய
அருட்களிலெல்லாம் மிக்க மகத்தான அருளாய்
அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப் பூவுலகில் தம் பொற்பாதங்கள் பதித்த மகத்தான #நாளை_கொண்டாடுதல்,
#சிறப்பு_செய்தல்,
#அவர்களது_உதயத்தில்_மகிழ்வு #கொள்தல்
ஆகியன தவறு, ஹராம், வழிகேடு, பயனற்ற செயல் அத்தினத்தை சிறப்பு செய்வதில் இஸ்லாமுக்கு உகந்த எந்த செயலுமில்லை என்று கூறுபவர்கள்..
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழையும், பெருமைகளையும் எடுத்துரைப்பவர்களை விமர்சிப்பவர்கள் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களாக இருப்பர்...
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வாழ்த்துபவர்களை வாயடைக்கச், அண்ணலவர்களின் புகழை இருட்டடிப்பு செய்வதில் ஏனிந்த இந்த வெறி என்று தெரியவில்லை...
அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருட்கொடைகள் கிடைக்கப் பெற்ற தினங்களில் இபாதத் செய்து நன்றி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவ்வாறு குறிப்பிட்ட தினத்தில் நற்செயல்கள் செய்தல் முந்தைய நபிமார்களின் நடைமுறையாகவும் அமைந்திருந்தது என்பதையும் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை பின்பற்றினார்கள் முஸ்லிம் உம்மத்தைப் பின்பற்ற சொன்னார்கள் என்பதையும் இந்நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது...