சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் சமூக தொண்டு பணிகள்

சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் சமூக தொண்டு பணிகள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ஆலிம்களை பார்த்து என்ன செய்தீர்கள் என்று கேட்கக்கூடிய வஹ்ஹாபிய சமுதாயத்தை சார்ந்த சில நண்பர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்....

#பத்ரிய்யா அரபிக்கல்லூரியின் சார்பாக....
#ஏழை_எளிய_குமர்களுக்கு_சமூக #திருமணம்_செய்து_வைத்தது
الحمد لله ......
சென்னை.
பத்ரிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி அம்பத்தூர் மற்றும் பாடியில் கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது

கல்வி மற்றும் ஏராளமான மனித நேய செயல்கள் மூலம் சமூகத்திற்கு மிகப்பெரிய தொண்டாற்றுகிறது.

மனித நேய செயல்களில் முக்கியமாக ஏழை எளிய குமர்களுக்கு இலவசமாக #பத்ரிய்யா சார்பில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது

கடந்த ஆண்டுகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் நேற்றைய தினம்
(27/10/2022 வியாழன்) சென்னை அம்பத்தூர் HPM திருமண மண்டபத்தில் உலமா பெருமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் முன்னிலையில் ஐந்து குமர்களுக்கு வாழ்வளித்தது சென்னை பத்ரிய்யா..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தம்பதியருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது..

#குறிப்பு:
ஆம்புலன்ஸ் வைத்துக் கொண்டு சேவை செய்கிறோம் என்கிற பெயரில் மக்களிடமிருந்து அநியாயமாக பணத்தை வசூலிக்க கூடிய சில இயக்கங்களையும் இந்த சமுதாயம் சார்ந்து இருக்கிறது என்பதையும் நினைவு படுத்துகிறோம்..