எங்கிருந்து A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுக்குஇவ்வளவு பணம்..?
எங்கிருந்து A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கு
இவ்வளவு பணம்..?
மாணியூர் அஹ்மத் முஸ்லியாரின் சகோதரர் நந்தி தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மாணியூர் அப்துல் காதர் அல் காசிமி உஸ்தாத் ஆதாரத்துடன் சொல்லும் வியப்பான செய்தியைப் பாருங்கள்..
✍️அமீன் மாணியூர்
இச்சம்பவம் ஆறு ஆண்டுகளுக்கு முன் 2012_ ஏப்ரலில் நடந்தது.
மாணியூரிலே இடவச்சால் என்னுமிடத்தில் வசிக்கும் அப்துல் காதர் அல் காசிமி உஸ்தாத் அவர்கள் தன்னைப் பார்க்கச் சொன்னதால் நானும் எனது நண்பர் இப்ராஹிமும் உஸ்தாத்தின் வீட்டிற்குச் சென்றோம்.
A.P. உஸ்தாத் அவர்கள் இரண்டாவது முறையாக கேரள யாத்திரை செய்த நேரம் அது.
கேரள யாத்திரைக்கான சிறப்பு ரயிலின் விளக்கப்படம் குறித்த தனது வியப்பை வெளிப்படையாக வெளிப்படுத்திய உஸ்தாத் தனது சில அனுபவங்களையும், சமஸ்தாவின் கடந்த கால நிகழ்வுகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
மாணியூரில் ஒரு கல்லூரியின் வசூல் தொடர்பாக உஸ்தாத் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற அனுபவத்தை முதலில் விவரித்தார்கள்..
“வெள்ளிக்கிழமை அபுதாபியில் உள்ள ஒரு மசூதியில் வசூல் செய்ய வாய்ப்பு கிடைத்தது..
அன்று போதிய பணம் கிடைக்காததால் வரும் வெள்ளிக்கிழமை கொஞ்சம் சிறப்பாக வசூல் செய்ய திட்டமிட்டோம்.
அந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்குப் பிறகுதான் A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களும் இங்கு ஜும்ஆவுக்கு வந்துள்ளார்கள் என்று தெரிந்துகொண்டேன்.
ஜுமுஆ முடிந்து மலையாளிகளிடம் கொஞ்ச நேரம் பேச அழைக்கப்பட்ட A.P. உஸ்தாத் அவர்கள் எழுந்த உடனே மக்களை நோக்கி சொன்னார்கள்.
“இன்று நான் உங்களிடம் வசூல் கேட்க வரவில்லை; இன்று யாரும் என்னிடம் காசு கொடுக்க வேண்டியதில்லை. என்று சொல்லிவிட்டு உஸ்தாத் ஓரிரு விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழுவில் இருந்த சிலர் எழுந்து அவருக்கு நன்கொடை அளிக்க ஆரம்பித்தார்கள்.
ஏராளமானோர் நன்கொடை அளித்தனர். இந்நிகழ்ச்சி முடிந்ததும் உஸ்தாத் அவர்கள் அந்த பள்ளிவாசல் இமாமிடம் பெற்ற பணம் முழுவதையும் ஒப்படைத்து, அந்த பணத்தை அங்குள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கச் சொன்னார்கள்.
நான் அருகிலுள்ள ஒரு தூணின் பின்னால் இருந்து இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
ஒரு கல்வி நிறுவனத்தின் துயரங்களும், கடன்களும் நீங்க நாங்கள் இரண்டு வாரங்களாக இங்கு இருக்கிறோம். எதிர்பார்த்த வெற்றி காணப்படவில்லை. (வசூல் கிடைக்கவில்லை)
பணம் வேண்டாம் என்று எழுந்து நின்ற உஸ்தாதுக்கு மக்கள் ஏராளமாக பணம் கொடுக்கிறார்கள். இதை நான் என் சக நண்பரிடம் சொன்னேன். நாங்கள் எங்கள் ஆச்சரியத்தை மாறிமாறி பகிர்ந்து கொண்டோம்.
இச்சம்பவத்தைச் சொல்லிவிட்டு என்னிடமும் எனது நண்பரிடமும் அப்துல் காதர் அல் காசிமி உஸ்தாத் கேட்டார்கள்..
“A.P. உஸ்தாதுக்கு ஏன் மக்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறார்கள், உஸ்தாதின் கைகளுக்கு இவ்வளவு பணம் எப்படி வருகிறது என்பதைச் சொல்ல முடியுமா?”
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு நான் சொன்னேன்..
“உஸ்தாதுக்கு பணம் கொடுக்கப்பட்டதை இங்கே பார்க்கலாம்; (ஏராளமான கல்வி நிறுவனத்தின் மூலமாக) எனவே கொடுப்பவர்கள் மீண்டும் மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
“அது ஒன்றும் இல்லை.
ஆனால் இதற்குப் பின்னால் இன்னொரு அடிப்படைக் காரணம் இருக்கிறது.
நான் உன்னிடம் சொல்கிறேன் கேள் என்றார்கள்...
"இன்னும் சொல்லப்போனால், நாங்கள் இதுவரை கேள்விப்படாத ஒரு ஆச்சரியமான சம்பவத்தை உஸ்தாத் சொன்னார்கள்.
சமஸ்த பிளவுபடுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, A.P.உஸ்தாதும் மற்றும் மறைந்த கூற்றநாடு உட்பட ஆறு அறிஞர்கள் உயிருடன் இருந்த ஒரு முக்கியமான பெரிய மனிதரை அதாவது ஒரு வலியுல்லாஹ்வை (சூஃபி) சந்தித்தனர்.
(வலியுல்லாஹ்வின் பெயர் ஃபரீத் பாவா என்று உஸ்தாத் சொன்னதாக ஞாபகம்).
கலந்துரையாடலுக்கு
பிறகு, விடைபெறும் வேளையில் வந்தவர்களிடம் அந்த வலியுல்லாஹ் (சூஃபி) கூறினார்கள்..
"நீங்கள் அனைவரும் உங்களிடம் உள்ள பணத்தை எனக்குத் தர வேண்டும்."
எல்லோரும் தங்கள் பாக்கெட்டுகளைத் தட்டி, தங்கள் கையில் இருந்த பணத்தை வலியுல்லாஹ் விடம் கொடுத்தார்கள்.
சிறிது நேரம் கழித்து, வலியுல்லாஹ் எல்லோரிடமும், "இப்போது உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டார்கள்..?"
A.P.உஸ்தாத் தவிர மற்ற அனைவரும், "திரும்பச் செல்லுவதற்க்கான பேருந்துக்குள்ள பணம்தான் பாக்கி, அதை எடுத்து விட்டு மீதியைக் கொடுத்தோம்" என்றார்கள்.
A.P.உஸ்தாதின் பதில் வேறுவிதமாக இருந்தது.
“என் கை காலியாக உள்ளது; என்னிடம் ஒன்றுமில்லை..
என்னிடம் உள்ள எல்லாவற்றையும் நான் உங்களிடம் கொடுத்தேன்”. என்றார்கள்.
இதைக் கேட்ட வலியுல்லாஹ் கூறினார்கள்
"உன் கை ஒருபோதும் காலியாகாது" என்றார்கள்.
இச்சம்பவத்தை எடுத்துரைத்து உஸ்தாத் சொன்னார்கள்: அன்று முதல் A.P.உஸ்தாதின் கை காலியாகவில்லை.
குறிப்பு: இன்று மாணியூர் அப்துல் காதர் அல் காசிமி உஸ்தாத் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் பிழைகளை மறைத்து மன்னித்து அருள் புரிவானாக!
ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கி சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்குவானாக!
ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் மஹ்ஷர் வாழ்க்கையை எளிதாக்கி மாநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்துக்கு உரியவராக்கி மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக ஆக்குவானாக!
ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் கல்விச் சேவைகளை கபூல் செய்தருள்வானாக!
ஹழ்ரத் பெருந்தகை அவர்களை பொருந்திக் கொள்வானாக!
ஹழ்ரத் பெருந்தகை அவர்களை நாளை மறுமையில் உலமாக்களின் தலைவர் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்களின் தலைமையிலான உலமாக்களுடன் இணைத்தருள்வானாக!!
துஆ விருப்பத்துடன்.....
உங்கள் அன்புச் சொந்தம்
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி
7598769505.
https://www.facebook.com/maniyoorin/
https://www.maniyoor.com/