Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அறிவின் ஜோதி மறைந்தது....

✍️A.P.அபூபக்கர் பாகவி ஹஸ்ரத்
கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா.

தென் கேரள ஜம்மியத்துல் உலமா தலைவர் மர்ஹூம்.சேலக்குளம்‌
K.M. முஹம்மது அபுல் புஷ்ரா பாகவி ஹஸ்ரத் அவர்கள்
தென் கேரளாவில் சுன்னத் வல் ஜமாஅத்தின் பிரச்சாரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் அறிஞர்..

தென் கேரளாவில் சுன்னத் வல் ஜமாஅத்தின் ஒற்றுமைக்காக பெரும் பாடுபட்ட மகத்துவமிக்கவர்...

தென் கேரளாவில் சுன்னத் வல் ஜமாத் அமைப்புகள் போதிய செல்வாக்குப் பெறாத நேரத்தில தென் கேரள ஜம்மியத்துல் உலமா சபையைத் துவங்கி நாற்பதாண்டுகளாக பொதுச் செயலாளராக இருந்து மகத்தான முறையில் செயல்பட்டவர்....

தென் கேரள ஜம்மியத்துல் உலமா சபை நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளை ஒருங்கிணைக்கவும்,இரு சமஸ்தா தலைவர்களையும் ஈடுபடுத்தவும், அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டவர்...

கேரளாவில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளின் தலைவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி பாதுகாத்து வந்த அபுல் புஷ்ரா ஹஸ்ரத் அவர்கள் ஒரு ஈடு செய்ய முடியாத பேரறிஞராக விளங்கினார்...

வடுதல மூஸா மவ்லவிக்குப் பிறகு தென் கேரள ஜம்மியத்துல் உலமாவின் முஃப்தியாகவும், தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.. அறிவின் அனைத்து அம்சங்களிலும் தேர்ச்சி பெற்ற கேரளாவின் தலைசிறந்த, எண்ணப்பட்ட சமய அறிஞர்களில் இவரும் ஒருவர்...

மரைக்காயர் குஞ்ஞீ ஹாஜியார்_ பாத்திமா தம்பதிகளின் மகனாக 1936_ ஜனவரி 5_ இல் எர்ணாகுளம்_ பெரும்பாவூர் அருகிலுள்ள சேலக்குளம் என்ற ஊரில் பிறந்தார் பிறந்தார்..

சேலகுளத்தில் ஆரம்ப கல்வி கற்கும் காலத்திலேயே பிரபல அறிஞரும், ஸெய்யிதும், திருவிதாங்கூரிலே பல ஜமாஅத்துத்துகளின் காஜியுமான பாடூர் தங்கள் அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றார்..

புதியாப்பிள்ளை அப்துர்ரஹ்மான் முஸ்லியார் அவர்களின் தர்ஸில் கல்வி கற்கும் பாக்கியத்தையும் பெற்றார்...

விளயூர் அலவி குட்டி ஹஸ்ரத், வாளக்குளம் அப்துர்ரஹ்மான் ஹஸ்ரத், இம்பிச்சி முஸ்லியார் போன்ற கேரளாவின் பிரபலமான அறிஞர்களின் தர்ஸிலும் கல்விக் கற்றார்....

பின்னர் தமிழ்நாடு வேலூரில் உள்ள பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கு சென்று பாகவி பட்டம் பெற்றார்.

காரிக்கோடு, தேவலக்கரை, முதிரப்பறம்பு, தாழத்தங்கடி, ஈராட்டுப்பேட்டை, குற்றிக்காட்டூர், காஞ்சிரப்பள்ளி, சங்கனாச்சேரி ஃபலாஹியா, மஞ்சேரி நஜ்முல் ஹுதா, ஜாமியா மன்னானிய்யா ஆகிய இடங்களில் சேவையாற்றியுள்ளார்.

சேலக்குளத்திலுள்ள அசாசுத்தஃவா வாஃபி அரபிக் கல்லூரி அபுல் புஷ்ரா மௌலவி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்..

தென் கேரளாவின் சிறந்த அறிஞர்கள் பலர் அபுல் புஷ்ரா ஹஸ்ரத் அவர்களின் சீடர்களாகும்..

மடவூர் C.M.வலியுல்லாஹி, காளம்பாடிமுஹம்மது முஸ்லியார், வடுதல மூஸா மௌலவி, மாநில கேரள ஜம்இய்யதுல் உலமா தலைவர் என்.கே.முஹம்மது முஸ்லியார், யு.கே.ஆற்றக்கோய தங்கள் மற்றும் சாலியம் அப்துர்ரஹ்மான் முஸ்லியார் ஆகியோர் சேலக்குளம் அபுல் புஷ்ரா ஹஸ்ரத் அவர்களின் வகுப்பு தோழர்களாகும்..

https://www.sirajlive.com/chelakulam-abul-bushra-moulavi-scholar-who-stood-for-sunni-unity-in-south-kerala.html...

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் பிழைகளை மறைத்து மன்னித்து அருள் புரிவானாக!

ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கி சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்குவானாக!

ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் மஹ்ஷர் வாழ்க்கையை எளிதாக்கி மாநபி ஸல் அவர்களின் ஷஃபாஅத்துக்கு உரியவராக்கி மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக ஆக்குவானாக!!

ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் கல்விச் சேவைகளை கபூல் செய்தருள்வானாக!!

மிகச் சிறந்த பிரதிபலனை மண்ணறையிலும் நாளை மறுமையிலும் வழங்கி ஹழ்ரத் பெருந்தகை அவர்களை முஆத் இப்னு ஜபல் ரலி அவர்களின் தலைமையிலான உலமாக்களுடன் இணைத்தருள்வானாக!!!

ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!

தகவல்:M.சிராஜுத்தீன்அஹ்ஸனி...
7598769505