குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மெளலானா மெளலவி மாஹீன் அன்வரி குறித்து சிறு குறிப்பு
#அஸ்ஸலாமு_அலைக்கும்..🍀
✍️Badharudheen amba..
கன்னியாகுமாரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் (எனதுசொந்த ஊர்) அமைந்திருக்கும் திருவை வாழ் மக்களால் (தைக்காபள்ளி)என்று அழைத்து வரும் ஜீலானி பள்ளிவாசலின் புதிய தோற்றம்.🌹
மாஷா அல்லாஹ்.
இங்கு இமாமாக பணிபுரிபவர் எனது சிறுவயது வகுப்பு நண்பர் ஜெய்னுல் ஆப்தீனின் புதல்வரும், சொந்த ஊரில் இருக்கும் அல்ஜாமியுல் அன்வர் அரபிகல்லூரியிலேயே பயின்று அங்கேயே அன்வரி என்ற பட்டம் பெற்றவரும், சொந்த ஊரிலேயே இமாமாக இருப்பவரும், என்னை எப்போது பார்த்தாலும் அளவு கடந்த பாசத்தால் அம்பா அம்பா என்று அழைப்பவரும், தகப்பனாரின் நண்பர் என்ற முறையில் கண்ணியப்படுத்தி வருபவரும்,
கணிரென குரலுக்கு சொந்தக்காரரும், அடுக்கடுக்காய் உதிரும் அரபு மொழியும், என்னை எப்போதும் ஈர்ப்பதுமான குரல்வளம் படைத்த வரும்,நான் அன்புடன் மகனே என்று அழைக்கும் அன்பிற்க்கினிய ஆலிம் மாஹீன்( அன்வரி) அவர்கள் தான் சொந்தஊருக்கே பெருமை சேற்த்து கொண்டிருக்கிறார்.
அல்ஹம்து லில்லாஹ்.
இவரின் உடன் பிறந்த இரு சகோதரர்கள் ஆலிம் என்பது குறிப்பிடதக்க்து.
ஒரே குடும்பத்தில் மூன்று ஆலிம்களை உருவாக்கிய எனது நண்பருக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலும் மேலும் எல்லாவிதமான நற்பேறுகளையும் ஈருலகிலும்கொடுத்தருள் புரிவானாக...