நிமிஷ பிரியா விடுதலையும் உஸ்தாதின் தலையீடும் எதிரிகளின் விமர்சனமும்
நிமிஷப்ரியாவின் விடுதலைக்காக கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது, இதை பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளேன்.
ஆனால் கடைசி நேரத்தில்
ஒரு இந்திய முஸ்லிம் மார்க்க அறிஞரின் தீர்க்கமான தலையீடு அவரது விடுதலைக்கு ஒரு முக்கிய காரணியாக மாறும்போது, நேர்மறையான பக்கத்தை கவனிக்காமல் விடக்கூடாது.
குறிப்பாக சங்க பரிவார் ஆட்சியின் போது,
ஒரு இஸ்லாமிய நாட்டில் ஒரு முஸ்லிம் அல்லாத பெண் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, இந்தியாவின் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞரின் தலையீடு அப்பெண்ணின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால்,
அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகும்.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் இதை எல்லா சந்தர்ப்பங்களிலும் எடுத்துரைக்கக்க முடியும்.
இந்த மகத்தான முயற்சியை கேரள முஸ்லிம் சமூகத்தின் பெருமைக்குரிய கமருல் உலமா ஷெய்குனா காந்தபுரம் உஸ்தாத் மேற்கொண்டார்கள் என்பதை கருத்திற் கொண்டு அதை மற்ற பிரச்சினைகளுடன் ஒப்பிட்டு அற்பமாக்குபவர்களின் நோக்கம் என்ன? அந்த மகாமனிதர் மீது கொண்ட வெறுப்பு,
பொறாமை அல்லாமல் வேறென்ன காரணம் இருக்க முடியும்?
எதிர்ப்பும், கேலியும் செய்பவர்களால் சொந்தமாக எதுவுமே செய்ய முடியாத ஒரு விஷயத்தில் ஒரு உஸ்தாத் ஒரு நாட்டின் பிரதிநிதியாக மாறும்போது, பொறாமைப்படுபவர்களைக் குறித்து நாம் என்ன சொல்ல…?
கடந்த காலத்தில், சவுதி அரேபியாவில் நிதாகாத் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, உஸ்தாதின் தலையீடு கவனத்தை ஈர்த்தது.
இப்போது, நிமிஷா பிரியாவின் விஷயத்தில் உஸ்தாதின் சர்வதேச உறவுகள் சர்ச்சை செய்யப்படும்போது பொறாமை கொண்டவர்களுக்கு உள்ள ஒரேயொரு வழி விமர்சனம் மட்டும்தான்.
ஷெய்குனா அவர்களுக்கு நலமுடன் நீண்ட ஆயுளை கருணையாளன் அல்லாஹ் வழங்கி அருள்வானாக, ஆமீன்..