உதகையில் நடைபெற்ற நூறு கோடி ஸலவாத் மஜ்லிஸ்
கடந்த 9 ஆண்டுகளாக
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF
புனித ரபீவுல் அவ்வல் மாதம் வருகை தரும் வேளையில் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 கோடி ஸலவாத் சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகிறது...
இந்த ஆண்டும் ரபீவுல் அவ்வல் மாதம் வருவதற்கு முன்பே இந்த அறிவிப்பை SSF வெளியிட்டது..
இறைவன் அருளால் கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் 100 கோடி ஸலவாத்தின் அறிமுக விழாக்கள் நடத்தி ஸலவாத்தின் சிறப்புக்களை மக்களுக்கு விளக்கச் செய்து கோடிக்கணக்கான ஸலவாத்துக்களை ஓதச்செய்தது SSF..
லட்சக்கணக்கான மக்கள் ஓதிய கோடிக்கணக்கான ஸலவாத்துக்களை பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விழா இன்று ஊட்டியில் நடைபெறுகிறது
ஏராளமான சாதாத்மார்கள் உலமாக்கள் உமராக்க்கள் தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் உலக மக்கள் அனைவருக்காக துஆ செய்யப்படும்