எதை நோக்கி சவூதி அரேபியா செல்கிறது
எதை நோக்கி செல்கிறது
சவூதி அரேபியா
ரபீஉல் அவ்வலில் சவூதிஅரேபியாவில் பிரமாண்ட இசை கச்சேரி🎤🎼🎹🎶..
மவ்லித் பித்அத்..
மீலாது விழா பித்அத்.
சினிமா ராகத்தில் மவ்லித் ஓதுவது பச்சை பித்அத்.
மவ்லித், மீலாது விழா நாயகம் கற்றுத் தராதவைகள்.
ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபியின் பிறந்த மாதத்தில் பாமர மனிதன் தனது வீட்டை அலங்கரிப்பது பித்அத்.
பள்ளிவாசலில் வண்ண வண்ண அலங்கார பொருட்கள்,விளக்குகள் மாட்டுவது பித்அத்.
என இந்த மாதத்தில் ஆர்ப்பரித்து கொக்கரித்தார்கள் வஹாபிகள்.
ஆனால் வஹாபிகளின் ஆசான்கள் வாழும் சவூதியில் இசை கச்சேரி, இசை நடனம்💃 மிக பிரமாண்டமான முறையில் நடந்துள்ளது..
ஆம்!! .
ரபீஉல் அவ்வல் மாதம் பிறை பதிமூன்று அன்று சவூதி தலைநகர் ரியாத் தில் இரண்டரை லட்சம் மக்கள் பங்கு பெற்ற பிரமிக்க வைக்கும் பாப் இசை கச்சேரியை நடத்தியுள்ளார்கள்..
மவ்லித், மீலாது விழா வுக்கு எதிராக நிரந்தரமாக அடுக்கடுக்காக ஃபத்வா க்களை வீசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது எங்கே ஓடி ஒளிந்தார்கள் என்று தெரியவில்லை.
இஸ்லாமிய கலாச்சாரம், நிறைந்து காணப்பட்ட சவூதி அரேபியா வஹாபிகளின் கைகளுக்கு சென்ற போது இஸ்லாமிய பண்பாடுகள்,மற்றும் இஸ்லாமிய அடையாள சின்னங்கள் அழிக்கப்பட்டு அமெரிக்க, இஸ்ரவேலின் தீய கலாச்சாரங்கள் படிப்படியாக நடைமுறை ப்படுத்தப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்..
அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்..
இந்த இசைக்கச்சேரி யில்🎶 அமெரிக்காவின் பிரபல பாடகர் பிட்புல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..
மீலாது விழாவில் பள்ளிவாசலையும், தெருக்களையும், வீட்டையும் வண்ண வண்ண அலங்கார பொருட்களையும், விளக்கம்களையும் வைத்து அலங்காரித்தால் அதை வீண் செலவு, வீண் விரயம் என்று சொல்லி பாமரர்களை ஏமாற்றும் வஹாபிகளுக்கு இதுவெல்லாம் ஹலாலா..?
படிப்படியாக அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரவேலின் கலாச்சார த்தை கொண்டு வரும் சவூதிக்கு மீலாது விழாக்களும், மவ்லிதும் மட்டும் தான் பித்அத்..
உரை: S.அப்துல்_சலாம்_ஸகாஃபி..
தமிழில்:M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி.