முஸ்தஃபா முஜ்தபா மாநபி பெயர்களின் சிறப்பை விளக்கும் சிறு நூல்

முஸ்தஃபா முஜ்தபா மாநபி பெயர்களின் சிறப்பை விளக்கும் சிறு நூல்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அஸ்ஸலாமு அலைக்கும்..

#மாநபி சிறப்பை விவரிக்கும் #இரண்டாவது_நூல் வெளியீடு.

அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் #1500_வது_பிறந்த_நாளை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த சங்கையான ரபீஉல் அவ்வல் மாதத்தில் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் (#SSF) சார்பில்
#மாநபியின்_புகழை மக்களுக்கு எத்தி வைக்கும் நோக்கில் வெவ்வேறு தலைப்புகளில் 12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

#முஸ்தஃபா_முஜ்தபா எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாமங்களை விவரிக்கும் புத்தகம் நேற்றைய தினம் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் குமரி_மாவட்ட_பொருளாளர் முஹம்மது_ஃபாஸில் அவர்கள் வீட்டில் நடைபெற்ற மவ்லிது மஜ்லிஸில்
வைத்து TMJ குமரி மாவட்ட தலைவர்
மெளலானா_மெளலவி
அல்_ஹாஃபிழ்_Z_அஹ்மத்_கபீர்
அல்தாஃபி உஸ்தாத் அவர்கள் வெளியிட
SSF குமரி மாவட்ட முன்னாள் தலைவர்
மெளலானா_மௌலவி
Z_அப்துல்_ஹக்கீம்_அன்வரி ஹஸ்ரத்
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..

இரண்டாவது பிரதியை சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு குமரி_மாவட்ட_செயலாளர்
மெளலானா_மெளலவி
I_அஹ்மது_சுல்தான்_அன்வரி அவர்கள் வெளியிட குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின்
முன்னாள் செயலாளர் #மெளலானா_மெளலவி_S_ஷரஃபுத்தீன்
அஸ்ஹரி உஸ்தாத் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

இந்த மகத்தான மவ்லிது மஜ்லிஸில் ஏராளமான பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது..

வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...

ஆமீன் யா றப்பல் ஆலமீன்

🌹🌹🌹🌹🌹🌹

#வசந்தம்_வந்தது!

#RABIYYUL_AWWAL
#MEELAD_UN_NABI
#SSF_KANYAKUMARI
#SSF_TAMILNADU
#SSF_INDIA

©SSF KANYAKUMARI