உத்தம உம்மத்

உத்தம உம்மத்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அஸ்ஸலாமு அலைக்கும்..

#மாநபி_சிறப்பை_விவரிக்கும் #இரண்டாவது_நூல்_வெளியீடு.

அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1500_ வது பிறந்த நாளை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த சங்கையான ரபீஉல் அவ்வல் மாதத்தில் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் (SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு எத்தி வைக்கும் நோக்கில் வெவ்வேறு தலைப்புகளில் 12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

இதன் படியாக
முதல் புத்தகம் #உத்தம_உம்மத் எனும் தலைப்பில்
ரபீஉல் அவ்வல் பிறை 1
அன்று திருவை ஹமீதிய்யா
மஜ்லிஸில் வைத்து வெளியிட்டோம்..

#முஸ்தஃபா_முஜ்தபா எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாமங்களை விவரிக்கும் #இரண்டாவது_புத்தகம் இன்றைய தினம் #மார்த்தாண்டம் முஹ்யித்தீன்
முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசலில் நடைபெற்ற மவ்லிது மஜ்லிஸில்
வைத்து
மெளலானா மெளலவி
அஸ்ஹர் ஸகாஃபி உஸ்தாத் அவர்கள் வெளியிட மார்த்தாண்டம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்
மெளலானா மௌலவி
S.#ஷரஃபுத்தீன்_அஹ்ஸனி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..

இந்த மகத்தான மவ்லிது மஜ்லிஸில் ஏராளமான பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது..

வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...

ஆமீன் யா றப்பல் ஆலமீன்

அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங்‌ ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்..