என்றும் அழியாத அதிகாரத்தின் அதிபதி
"#என்றும்_அழியாத_அதிகாரத்தின் #அதிபதி_அவன்_ஒருவன்_மட்டுமே...
அரசர் ஹாரூன் ரஷீத்தின் மரண நேரம்.
சுற்றிக் கூடியிருந்தவர்களிடம் அவர் சொன்னார்.
"நான் இறந்தவுடன் என்னை அடக்கம் செய்யும் கல்லறைக்கு அழைத்துச் செல்வீர்களா? எனக்கு அதை பார்க்க வேண்டும்."
அந்நேரம் அவர் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டார்.
கல்லறையைப் பார்த்து ஹரூன் ரஷீத் அழுதுகொண்டே தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் திரும்பி அவர்களிடம் கூறினார்.
"என் செல்வம் எனக்கு பயன்படவில்லையே, என் அதிகாரமும் பதவியும் என்னை விட்டு போகிறதே."
பின்னர் அவர் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி அழுதார்.
"என்றும் அழியாத அதிகாரத்தின் அதிபதியே..
அதிகாரம் போய்விட்ட இந்த பாவிக்கு கருணை காட்டுவாயாக.
சகோதரர்களே அறிந்து கொள்ளுங்கள்..
இரவு எவ்வளவு நீண்டதாக இருந்தாலும், காலைப் பொழுது விடியாமல் இருக்காது. ஆயுட்காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் ஒரு நாள் கல்லறைக்குள் நுழையாமல் இருக்க முடியாது..
இறைவா.. இம்மையிலும் மறுமையிலும் எங்கள் மீது கருணை காட்டுவாயாக... ஆமீன்
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி