Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#அறிஞரும்_அறிவிலியும்
#சமமாவார்களா.....?

கேரளத்தின் மிகப் பிரபலமான மார்க்க அறிஞர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய #பொன்மழ_அப்துல்_காதர்_முஸ்லியார் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர் ஒருவரை சந்தித்தார்கள் விரிவான சோதனைகளுக்கு பின் சில மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்த மருத்துவர் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், அவை ஒவ்வொன்றின் மருத்துவ குணங்களையும் விளக்கி சொன்னார்கள்.

ஒரு பேரறிஞரை சந்தித்த மகிழ்ச்சியில் பரிசோதனைக்கு பின் உஸ்தாது அவர்களுடன் மருத்துவர் அளவளாவிக் கொண்டிருந்தார்.

இயல்பாகவே பேச்சு சில மத சட்டச்சிக்கல்களுக்குள் சென்றது.உஸ்தாது மருத்துவரின் சந்தேகங்களுக்கு சரியான பதிலை வழங்கினார்கள்.அறிவுக்கடலல்வா உஸ்தாது அவர்கள்.பேசி கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் மருத்துவர் உஸ்தாதை இடைமறித்து உஸ்தாது சொன்னது சரியில்லை அதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

உஸ்தாது கேட்டார்கள்.

நீங்கள் எத்தனை வருடங்கள் மருத்துவம் பயின்றீர்கள்?

எட்டு ஆண்டுகள் என்றார் மருத்துவர் .

நீங்கள் இப்போது மருத்துவம் கற்றுக்கொள்கிறீர்களா?

மருத்துவர்: படிக்க எங்கே நேரம் கிடைக்கிறது? பயிற்சி முடித்த பிறகு கொஞ்சம் ஓய்வெடுக்க கூட நேரம் கிடைப்பதில்லை.

உஸ்தாது சொன்னார்கள்.
நான் பதினான்கு வருடங்கள் ஷரீஅத் கல்வி கற்றேன். இந்த வயதில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இப்போதும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எட்டு ஆண்டுகள் கற்ற அறிவை வைத்து எனக்கு சிகிச்சையும் மருந்தும் வழங்கிய போது எவ்வித ஆட்சேபனையுமில்லாமல் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன்.
உங்கள் கல்வியையும் அறிவையும் கண்ணியப்படுத்துவதற்காக!
மருத்துவ புத்தகங்களைப்படித்தும் கேட்டறிந்த அறிவைக்கொண்டும் நான் உங்களிடம் விவாதத்தில் ஈடுப்பட்டிருக்கலாமே? ஆனால் நான் படித்த விஷயங்களை சொல்லும்போது நீங்கள் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்.
இது நல்ல நடைமுறை அல்ல.

ஒரு விஷயத்தில் அறிவுள்ளவர்கள் சொல்வதை அங்கீகரிக்க வேண்டும்.
மதமோ,மருத்துவமோ,
நவீன விஷயங்களோ எதுவாக இருந்தாலும் சரி!

எட்டு வருடம் படித்த ஒரு மருத்துவர் சொல்வதை வேத வாக்காக ஏற்றுக் கொள்வார்கள்.
அவ்வளவு வருடம் தொழில் நுட்பம் கற்ற பொறியாளரை கண்மூடி நம்புவார்கள்.
நான்கைந்து வருடம் சட்டம் பயின்ற வழக்கறிஞர் சொல்லி கொடுப்பதை கூண்டில் ஏறி கிளி சொல்வதைப்போன்று சொல்வார்கள்.
பத்தும் பதினைந்தும் வருடங்கள் மார்க்கம் பயின்ற அறிஞர் ஒருவர் தான் படித்த காரியங்களை சொன்னால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.
சந்தேகம்,சர்ச்சை,விவாதம்,இவை அகங்காரமாகும்,திமிராகும்,மத நிந்தையும் நிராகரிப்புமாகும்.
இது மிக ஆபத்தான மனநிலையாகும்.

புத்தக வாசிப்பும்,கேட்டறிவும் ஒரு போதும் கற்றுத்தெளிதல் போன்றதல்ல.
அறிவுள்ளவனும் அறிவில்லாதவனும் ஈடாகுவார்களா?எனத்திருக்குர்ஆன் கேட்கிறது. ஒவ்வொரு மதத்திலும் அவர்களின் அறிஞர்கள் மதிக்கப்படுகிறார்கள்,மரியாதை செலுத்தப்படுகிறார்கள்.
இந்த சமூகத்தில் மட்டும் தான் மார்க்க அறிஞர்களுக்கு மதிப்பும் மரியாதையுமில்லை.
பனூ இஸ்ராயில்களின் அழிவுக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.....

தமிழில்.M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி....