திருவையில் நடந்த குமரி SSF.நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை..

திருவையில் நடந்த குமரி SSF.நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை..

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குமரி மாவட்ட
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு சார்பில் இன்று காலை பத்து மணி முதல் மதியம் வரை திருவை ஹமீதிய்யா மஜ்லிஸில் வைத்து மாவட்ட,
மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக இனிதே நடந்தேறியது...

நம் அமைப்பின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம்
நமது செயல்பாடுகள் எனும் தலைப்பில்

SSF மாநில செயலாளரும்
திருச்சி கரீப் நவாஸ்
அரபிக் கல்லூரி முக்கிய பொறுப்பாளியுமான
மெளலானா மெளலவி ஆபித் புகாரி ஹஸ்ரத் அவர்கள் வகுப்பு எடுத்தார்கள்..

இந்த நிகழ்வுக்கு குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் அல்ஹாபிழ் மவ்லவி அஹ்மது கபீர் அல்தாஃபி ஹஸ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்..

குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாவட்ட தலைவர் மெளலவி சிராஜுத்தீன் அஹ்ஸனி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்..

தக்கலை மக்காய்பாளையம் தலைமை இமாம் மெளலானா மெளலவி அப்துல்லாஹ் அன்வரி ஹஸ்ரத் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்..

தமிழக முஸ்லிம் ஜமாஅத்தின் குமரி மாவட்ட பொருளாளர் மெளலானா மெளலவி அல் ஹாஃபிழ் அன்சார் ரியாஜி ஹஸ்ரத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..

குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாவட்ட செயலாளர் மெளலானா மெளலவி அஹ்மத் சுல்தான் அன்வரி அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்..

இறுதியில் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் குமரி மாவட்ட பொருளாளர் முகம்மது ஃபாசில் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்..

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளை நிர்வாகிகள் இந்நிகழ்வுக்கு
கலந்து கொண்டனர்..

வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொள்வானாக..

இந்நிகழ்வு வெற்றிகரமாக அமையக் காரணமாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மகத்தான நற்கூலியினை வழங்கி அருள் பாலிப்பானாக...