Sirajudheen Ahsani
எழுத்தாளர்

உஸ்தாது எப்போதும் உஸ்தாது மட்டும்தான்

அவதூறுகளை கேட்டு மனம் வேதனையடைந்திருந்தால்

வன்முறைகளை கண்டு அஞ்சி நடுங்கியிருந்தால்

அச்சுறுத்தலுக்கு முன் வீழ்ந்திருந்தால்

மீம்ஸ்களை பார்த்து கோபம் கொண்டிருந்தால்

காந்தபுரம் காந்தபுரமாக இருந்திருக்கமாட்டார்கள்

மர்கஸ் இருக்கும் இடத்தில் தென்னை மரங்கள் அடர்ந்த பசுமை காடாக காட்சியளித்திருக்கும்

அனாதை குழந்தைகள் வறுமையில் வாடியிருப்பார்கள்

பல பெண்கள் மணமகனை கனவு கண்டு வறுமையால் திண்ணையில் காத்திருப்பை தொடர்ந்திருப்பார்கள்

விதவைகளின் கண்ணீர் இன்றும் ஒழுகி கொண்டிருந்திருக்கும்

வட இந்தியாவின் கிராமங்கள் மீண்டும் நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கும்

காரிலும் பைக்கிலும் போவக்கூடாது என்று விலக்கப்பட்ட உலமாக்கள் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் ஒரு மூலையில் ஒதுங்கிருந்திருப்பார்கள்

வரலாற்றில் காந்தபுரம் உஸ்தாதை எப்படி மறைக்க முயன்றாலும் இந்தியாவில் அவர்கள் உருவாக்கிய மறுமலர்ச்சியின் காம்புகள் தலை உயர்த்தி கொண்டே இருக்கும்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத கல்வி நிறுவனங்கள்,பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள், பெண் முன்னேற்ற கல்வி சாலைகள்,போன்ற சமூகத்தின் அனைத்து துறைகளிலும் கல்வி,கலாச்சார புரட்சி உருவாக்கிய ஒரு அறிஞரிடம் காலங்களாக வெறுப்பை விதைப்பதை பார்த்தால் எரிச்சல் வருகிறது

காந்தபுரம் என்ற கோழிக்கோடுட்டிலுள்ள ஒரு குக்கிராமத்திலே ஒரு சாமானிய ஆலிம் உலக நாடுகள் மற்றும் அரபு நாட்டு மன்னர்கள் முன்னிலையில் முக்கிய விருந்தினராகவும் இந்தியன் பிரதிநிதியாகவும் வளர்ச்சியடைந்தது
வியப்பாக உள்ளது

ரியாத் சிறைச்சாலையில் உஸ்தாது அவர்களை அடைத்து பிறகு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றதற்கும் கவிதை சொல்லி மன்னிப்பு கேட்டதற்கும் காலம் சாட்சி வரலாறு சாட்சி

விமர்சனம் செய்பவர்கள் விமர்சிக்கலாம்

குறை சொல்பவர்கள் குறை கூறலாம்
ஆனால் உஸ்தாது செய்ததை போன்ற கடின உழைப்பு செய்வதுதான் கடினம்

எங்களைவிட இந்த ஒரு சாதாரண மனிதன் வளர்ந்து விட்டாரே என்ற அதிபயங்கர பொறாமை

தீயை துணியால் பொதிந்து வைப்பது போன்று அது உன்னை அழித்து விடும்

படைத்த இறைவனே தவிர மற்ற எவருக்கும் அஞ்சாமல் தான் செய்யும் காரியங்கள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்த ஒரு ஆலிமை உங்களுக்கு முன் தலை குனிக்க வேண்டுமென்ற அற்ப ஆசையை வரலாறு அனுதாபம் கொண்டு அடையாளப்படுத்தும்

அல்லாஹ் இந்த நிழலை நீண்ட நாள் நிலை நிறுத்தி தருவானாகா ...................

தமிழில்
M: சிராஜூத்தீன் அஹ்ஸனி....