துக்கத்தை மறைத்துவெளியில் சிரிக்கிறாள்
துக்கத்தை மறைத்து வெளியில் சிரிக்கிறாள்.
இன்று நான் என் நண்பர் சுஹைலுடன் பைக்கில் சாவக்காட்டைச் சேர்ந்த சக ஊழியரான #ரசியாவின் திருமணத்திற்குச் சென்றேன்.
ஒரு சாதாரண திருமண வீட்டின் அடையாளமாக பந்தல்,உறவினர்கள் கூட்டம் மற்றும் வண்டிகளைக் காணலாம்.
இது ஒன்றும் இத்திருமணத்தில் இல்லாததால் பல முறை பலரிடம் விசாரித்து சென்று கடைசியில் வீட்டைக் கண்டுபிடித்தேன்.
வீட்டின் முன் ஒரு மாருதி உள்ளது.
வீடு என்பது யதார்த்தத்திற்கு பொருந்தாத ஒரு குடிசை.
எதிர்பார்த்தது போலவே திருமண பந்தல் இல்லை, மக்கள் கூட்டம் இல்லை, பிரியாணி வாசனையை நுகர்ந்து வரும் காகங்களின் சத்தமும் இல்லை.
எங்களைப் பார்த்ததும், பாசிலே என்று அழைத்து ரஸியா கொஞ்சம் நொண்டி நொண்டி அருகில் ஓடி வந்தாள்.
நேற்று அவள் சறுக்கி விழுந்ததில் காலில் சிறு காயம் ஏற்பட்டது.
முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட ரசியா புதுமணப்பெண்ணின் கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
ஆண்களாக நாங்கள் வெறும் ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். மாரடைப்பால் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்ட ஒரு சகோதரரை ரசியா பராமரித்தமைக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு நோயாளியும், அவரது தந்தை, மற்றும் சகோதரன், நான் என் நண்பன் உட்பட ஐந்து பேர்.
அண்டை வீட்டுக்காரர்களயோ, அல்லது குடும்பங்களாகவோ யாரையும் பார்க்க முடியவில்லை..
அனாதை இல்லத்தில் அவருடன் படித்த சில சகோதரிகள் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள்.
மணமகன் எப்போது வருவார்? அவர் இப்போது வருவாரா என்று கேட்டோம்.
நண்பர்களுடன் காரில் மணமகன் வருவார் என்று நினைத்தேன்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பைக்கில் யாரோ ஒருவர் வந்து நான்கு இருக்கைகள் கொண்ட மேஜையில் எங்களுக்கு உணவு பரிமாறினார்.
மேலும் ரசியா, “இதுதான் மணமகன் என்றார்.
ஆமாம்! மணமகன் தான்
தனது வழக்கமான உடையில் வந்து, எங்களுக்கு உணவு பரிமாறுகிறார், எங்களுடன் சாப்பிடுகிறார் !!
சுஹைலும் நானும் பிரமித்து நின்றோம்.
இதெல்லாம் ஒரு கனவுதானா ,, !!?
தனது வழக்கமான பாணியில் அவளது நோயின் அறிகுறிகளையும், சூழ்நிலைகளால் ஏற்படும் மன சிரமங்களையும் காட்டாமல் முகத்தில் புன்னகையுடன் எங்கள் அருகில் வந்து பேசினாள் ரசியா.. என் மணக்கோலத்தை யாரிடம் காட்ட..பார்க்க வேண்டியவர்கள் நேரமாகவே போய் சேர்ந்து விட்டார்களே...
எனது குழுவில் உள்ள சகாக்கள் பார்ப்பதற்காக ஒரு புகைப்படத்தை எடுத்தேன்.
(ரஸியாவின் திருமண புகைப்படம் என்றும் சொல்லலாமே)
அவள் சிரிக்கும் போது அவளது கண்களிலிருந்து கண்ணீர் வருவதைக் கண்டேன், மணமகள் தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறும்போது அழுகிற வழக்கமான கண்ணீர் அல்ல அது. தனது திருமணத்தின் செலவை தானே ஏற்பாடு செய்ய வேண்டிய கஷ்ட நிலையை நினைத்து அவள் அழுதாள்..
(தனக்கு உதவிக்கரம் நீட்ட உறவினர்கள் யாருமே இல்லாத நிலையில்) ரசியா தனது திருமணத்திற்கு உதவி செய்த சகாக்களுக்கு நன்றி தெரிவித்தபோது, அவளுடைய சகாக்கள், நண்பர்கள் மற்றும் அவருக்கு உதவ முன்வந்த பிற நலம் விரும்பிகளை நான் பெருமையுடன் நினைவு கூர்ந்தேன்.
ஏனென்றால் அந்த உதவியின் மகத்துவத்தை நான் நேரில் காண முடிந்தது (மிக்க கருணையாளர் அவர்களுக்கு வெகுமதி அளிக்கட்டும்).
நாங்கள் வெளியேறும்போது சுஹைலும் நானும் சிரித்துக் கொண்டிருந்தோம், ஆனால் நாங்கள் திரும்பிச் செல்லும்போது நாங்கள் எதுவும் பேசவில்லை. எங்களால் எதுவும் பேச முடியவில்லை.
திரும்பி வரும் வழியில், பல இடங்களில், ஆடிட்டோரியத்தில் மற்றும் வீட்டில் திருமணங்களைக் கண்டேன்.
ஆடம்பர நிறைந்த நிறைந்த திருமணங்கள்..
ஆம் வண்ண உடைகள், காதணிகள், வளையல்கள், கையில் இருக்கும் தொலைபேசியின் அதே நிறத்துடன் முகமூடிகள், மற்றும் பல தோற்றங்கள்.
பக்கத்து வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது, வயிற்றை நிரப்புபவர் என்னைச் சார்ந்தவனல்ல என்ற நபிமொழி ஒரு சாதாரண வாக்கியம் அல்ல. அதற்கு மிகப் பெரிய அர்த்தங்கள் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
முஹம்மது பாசில்.
07/03/2021.
தமிழில் : M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.