இளம்வயது மரணங்கள்
இளம்வயது மரணங்கள்.
பள்ளிவாசல் மையவாடியில் விபத்தில் மரணமடைந்த மகனுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்யும் ஒரு தாயாரின் கண்ணீரை வரவழைக்கும் புகைப்படம் இது.
நண்பர்கள் முன்னிலையில் கெத்தாக நிற்பதற்கு அவனுக்கும் ஒரு பைக் தேவை.
மகனின் நிரந்தர வலியுறுத்தலை சகித்துக் கொள்ள முடியாத அம்மா வளைகுடாவில் நிற்கும் தன் கணவரிடம் மகனுக்கு பைக் வாங்கி கொடுக்க சொன்னாள்.
அவன் இனி குழந்தையொன்றுமில்லையே!.அவனுடைய எல்லா நண்பர்களிடமும் பைக் இருக்கிறது.
வீட்டில் பைக் இருந்தால் மகனுடன் சேர்ந்து குடும்பத்தினரை சந்திக்க, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க எனக்கும் வசதியாக இருக்கும்.
இப்படி எல்லாத்துக்கும் ஒரு பைக் கண்டிப்பாக வேண்டும்.
அப்படி கடைசியில் வளைகுடாவில் நிற்கும் வாப்பா அனுப்பி கொடுத்த பணத்தில் மிகவும் விலையுயர்ந்த அழகான மாடல் பைக்கை மகன் வாங்கினான்.
ஒவ்வொரு பயணத்திலும் அம்மா அவனை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தாள்..
மகனே மெதுவாக செல்.!
கவனமாக செல்.!
உடற்கூறு முடிந்து ஜனாஸா கிடைத்த போது நிறைய நேரம் கடந்து விட்டது.வீடு மற்றும் சுற்றுபுறங்களிலெல்லாம் ஜனாஸாவை பார்க்க கூட்டம் அலைமோதுகிறது.
வெள்ளைத்துணியில் மூன்று முடிச்சுகள் கட்டி, மைய்யித் பெட்டியில் வைத்து மூடி அவனது ஜனாஸாவை சுமந்து பள்ளிக்கு சென்ற போது வழியோரங்களில் அவனது புன்னகைக்கும் புகைப்படத்துடன் பல நினைவு அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
முகநூலில் இன்னாலில்லாஹ் என்று நண்பர்களின் கமெண்ட் அதிகரித்து கொண்டே சென்றன.
விபத்துகள் மீண்டும் பலதும் அரங்கேறின.
அவனே பலரும் மறக்க தொடங்கினார்கள்.
அந்த அம்மாவுக்கும் வாப்பாவுக்கும் ஒரே எதிர்ப்பார்ப்பாக இருந்த மகனே அந்த பெற்றவர்களுக்கு எப்படி மறக்க இயலும்.
மையவாடியில் வந்து அவனது அம்மா நிறையநேரம் பேசுவாள்.குறும்பு மீசைக்கு கீழ் இருக்கும் அவனது உதடுகள் அவளுக்கு பதிலளிக்கவில்லை.நிரந்தரமாக அடைக்கப்பட்ட அந்த கண்ணுகள் திறந்து அம்மாவை பார்க்கவே இல்லை.
வாலிபர்களே!
உங்களை சுமந்து செல்லும் பைக்கின் பெரிய டயர்கள் சாலையில் ஒரு இன்ச் அளவு கூட தொடவில்லை.
இது விமானமல்ல பறப்பதற்கு.
வீட்டில் உங்களுக்காக காத்திருக்கும் பெற்றவர்களே..பிணவறைக்கு முன் காத்திருக்க செய்து விடாதீர்கள்.
திடீர் மரணங்கள் மற்றும் கொடிய நோய்களிலிருந்து அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றி அருள்புரிவானாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தமிழில்..
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.