அஹ்மத் கபீர் பாகவி ஹம்தான் பவுண்டேசன்
அஹ்மத்_கபீர்_பாகவி....
இவர் கேரளாவின்
தலைசிறந்த இஸ்லாமிய சொற்பொழிவாளர்..
கொல்லம் காராளிக்கோணம் எனும் ஊரில் அங்குள்ள ஜும்ஆ பள்ளிவாசலில்
இமாமாக வேலை பார்த்தவர்...
காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை
பயானுக்காக அவர் செல்லாத இடமே கிடையாது..
தற்போது அவர் பணியாற்றிய ஜமாஅத்தில் பிரமாண்டமான விதம் ஹம்தான் ஃபவுண்டேஷன்
எனும் ஹிஃப்ளுல் குர்ஆன் & ஷரீஅத் கல்லூரியை
நிறுவியுள்ளார்...
இந்த 200_ மேற்பட்ட பிள்ளைகள்
பயின்று வருகின்றனர்..
25- மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்...
தனது சொற்பொழிவின் மூலம் கிடைக்கும் வருமானங்களை
கல்லூரிக்காக செலவழிக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அங்கு விமரிசையாக கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....
சிறப்பு விருந்தினராக லூலூ யூசுப் சாஹிப் வருகைப் புரிந்தார்...
இன்னும் ஒரு சிறப்பு சொல்வதாக இருந்தால் அந்த ஜமாஅத்தின் (காராளிக்கோணம்) தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்...
அல்லாஹ் அவரது சேவைகளை கபூல் செய்வானாக...
மேன்மேலும் மார்க்க சேவைகள் புரிய
அல்லாஹ் துணை புரிவானாக...