தமிழக ஆலிமின் மகத்தான சேவைக்கு துணை நிற்கவும்

தமிழக ஆலிமின் மகத்தான சேவைக்கு துணை நிற்கவும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

800_குமர_குமரிகளின் சமூக_திருமணம்
தமிழக_ஆலிமின்
ஈடு_இணையற்ற சேவைக்கு துணை நிற்கவும்.

✍️ஸெய்யித் #இப்ராஹிம்_கலீல்_அல் புகாரி.
நிறுவனர்:
மஃதின்_அகாதமி_கேரளா

தமிழில்:
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி

உஸ்தாதே..!!
என் குழந்தையைக் கொல்ல எனக்கு அனுமதிக்கப்பட்ட ஏதேனும் சந்தர்ப்பம் உள்ளதா...? இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஊனமுற்ற தனது மாற்றுத்திறனாளி மகனுடன் என்னிடம் வந்த ஒரு தாய் கேட்டார்.
அந்த ஆதரவற்ற தாயின் கண்ணீர்தான் ஏராளமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மஃதின் அகாடமியின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பள்ளியை நிறுவ வழிவகுத்தது.

பாடந்தரா மர்கஸில் பல வருடங்களாக நடந்து வரும் சமூகத் திருமணத் திட்டத்தின் பின்னணியில் இப்படி ஒரு அனுபவம் இருக்கிறது.

திருமண வாழ்வு எனும் கனவில் நம்பிக்கையிழந்து மன உளைச்சலுக்கு ஆளான ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொள்ள மார்க்கத்தில் ஏதாவது வழிவகை உள்ளதா என்று பாடந்தரா மர்கஸ் நிறுவனர் தேவர்சோலை
அப்து சலாம் முஸ்லியார் அவர்களுக்கு கடிதம் எழுதிய கதையை தேவர்சோலை சலாம் முஸ்லியார் கண்ணீருடன் சொல்வதை கேட்டு இருக்கிறேன்...

அல்ஹம்துலில்லாஹ்..

ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதல் தான்
இன்று இந்த மேடை.
ஸுன்னி இளைஞர் சங்கத்தின் தலைமையில் பாடந்தர மர்கஸின் முயற்சியில் நடைபெறும் இந்த சமூக திருமண நிகழ்ச்சியில் இவ்வருடம் 800 பேர் மகிழ்ச்சியுடன் திருமண வாழ்வில் நுழைகின்றனர்.

அப்துஸ் சலாம் முஸ்லியார் மற்றும் அவரது சகாக்களின் மன உறுதி கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்துடன் குறிப்பாக பாடந்தராவுடன் எனக்கு நீண்டகால தொடர்பு உள்ளது.

1997ல், மேல்முரி மஸ்ஜிதுந்நூரில் சேவையை முடித்த பிறகு, புதிய திட்டங்களைப் பற்றி யோசித்தபோது எனது சேவையைத் தொடர ஏழு இடங்களுக்கு அழைக்கப்பட்டேன். அவையில் ஒன்று படந்தாரா.
வறுமையும், பசியும் நிறைந்த அந்த நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் சலாம் முஸ்லியார் மற்றும் பாடந்தரா மர்கஸ் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை நான் நெருக்கமாக அறிந்து கொண்டேன்.

சாமானியர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் கடினமாகி வரும் இக்காலத்தில், ஆயிரம் பேருக்கு புது வாழ்வு கொடுப்பது என்பது ஈடு செய்ய முடியாத சேவை. தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பரஸ்பர விட்டுகொடுத்தலின் மிகச் சிறந்த முன்மாதிரிதான் படந்தாராவில் நடைபெறும் சமூக திருமணம்.
இந்த திட்டத்தை இதயத்திற்கு நெருக்கமாக வைத்து எல்லா வகையிலும் ஒத்துழைக்கவும்.