கேரளா_வயநாடு_நிலச்சரிவை தேசிய_பேரிடராக_அறிவிக்க_வேண்டும் கேரள முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் அஸ்ஸெய்யித் இப்ராஹிம் கலீல் புகாரி தங்கள் கோரிக்கை...
கேரளா வயநாடு நிலச்சரிவை
தேசிய பேரிடராக அறிவிக்க
வேண்டும்
கேரள முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் அஸ்ஸெய்யித் இப்ராஹிம் கலீல்
புகாரி தங்கள் கோரிக்கை...
பெருந்துயரான வயநாடு சூரல்மலை, முண்டகை நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முஸ்லிம் ஜமாத் பொதுச்செயலாளர் ஸெய்யித் இப்ராஹிமுல் கலீல் புகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் அஸ்ஸெய்யித் இப்ராஹிம் கலீல் அல்புகாரி தங்கள் சூரல்மலைவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..
பெரும் நெருக்கடியான நேரத்தில் கேரள அரசின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த நெருக்கடியை சமாளிக்க கட்சி, அரசியல் பாராமல் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.பி.அபுபக்கர் முஸ்லிம் தலைமையிலான கேரள முஸ்லிம் ஜமாத் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன், சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் பி.முகமது ரியாஸ், வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
கேரள மாநில அனாதை இல்லக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் என்.அலி அப்துல்லா, கேரள முஸ்லிம் ஜமாத் செயலர்கள் வண்டூர் அப்துர்ரஹ்மான் ஃபைசி, மஜீத் கக்காடு,
முஸ்லிம் ஜமாத் மாவட்டத் தலைவர் கே.ஓ.அஹ்மது குட்டி பாகவி, செயலாளர் எஸ்.ஷரபுதீன், எஸ்.ஒய்.எஸ். மாவட்டத் தலைவர் பஷீர்... போன்றோர் கலந்து கொண்டனர். ..
தகவல்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி...