கிராண்ட் முஃப்தி அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள்
இன்று (05.11.2025) புதன்கிழமை கேரளா வயநாடு செல்லும் வழியில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கோவை அப்துல் அஜீஸ் பாகவி உள்ளிட்ட ஆலிம்கள் கோழிக்கோடு மர்கஜ் ஸகாஃபத்துஸ் ஸுன்னிய்யா மதரஸாவில் அதன் நிறுவனரும் இந்தியாவின் முதுபெரும் அறிஞருமான A.P அபூபக்ர் முஸ்லியார் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து நலன் விசாரித்தனர்.
மர்கஸின் நிர்வாகிகளும்
A.P உஸ்தாத் அவர்கள் மிகுந்த அன்போடும் கண்ணியத்தோடும் ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகளை வரவேற்றனர். தன்னுடைய பிஸியான தொடர் பணிகளுக்கு இடையிலும் கணிசமான நேரம் உரையாடிய உஸ்தாத் அவர்கள், தமிழக ஆலிம்களை சந்தித்து மார்க்க பணிகளில் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளம் தளராத அவர்களின் பேச்சும் சிந்தனையும் அனைவரையும் நெகிழச் செய்தது.