எங்கள் சகோதரரின் இரத்தம் காசு பணத்தை விட மதிப்புமிக்கது...
ஏமனில் கொல்லப்பட்ட அப்துல் மஹ்தியின் கப்ர்.
அவரது சகோதரர் தலால்
உட்பட குடும்பத்தினர் அங்கு பிரார்த்தனை செய்கின்றனர்..
அக்குடும்பம் தங்கள் அன்புக்குரிய அப்துல் மஹ்தியை
இழந்தனர்.
கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு தருகிறோம்
என்று சொன்னாலும் கூட அக்குடும்பம் குற்றவாளியை மன்னிக்காத காரணம் அவர்களுக்கு பணம் தேவையில்லை என்பதற்காக அல்ல.
மாறாக அவர்களின் சகோதரனின் இரத்தம் அதை விட மதிப்புமிக்கது.
உடனே ஓடிப்போய் அவர்களது மனதை மாற்ற முடியாது. எல்லாவற்றிற்கும்
நேரம் தேவை.
அதற்கான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. காந்தபுரம் உஸ்தாத்துடன் தொடர்புடையவர்கள் அதைத்தான் செய்தார்கள்.
அதில் அவர்கள் கொஞ்சம் வெற்றியும் கண்டனர்..
அது மூலம் நிமிஷா பிரியாவின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
இப்போது அக்குடும்பத்தை நிரந்தரமாக தொடர்புகொள்வதன் மூலம் அவர்களின் மனதை மாற்ற முடியுமா என்று பார்க்க முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
அது விரைவில் நடக்கட்டும், மஹதியின் குடும்பத்தினர் மன்னித்தால், தண்டனை ரத்து செய்யப்படும்,
நல்லது நடக்க காத்திருப்போம்...