விமானி ஆக வேண்டும் என்ற மாணவனின் ஆசையை நிறைவேற்றிய உஸ்தாத்

விமானி ஆக வேண்டும் என்ற மாணவனின் ஆசையை நிறைவேற்றிய உஸ்தாத்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

விமானியாக வேண்டும் என்ற தன் மாணவனின் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த #உஸ்தாத்..

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஸ்கை ஹாக் ஏவியேஷனிலிருந்தும் #பைலட் உரிமம் பெற்ற கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள காடப்படி எனும் சிற்றூரை சேர்ந்த ஆதில் நெய்யானுக்கு இந்தியன் கிராண்ட் முஃப்தி A.P. #அபூபக்கர்_பாகவி_ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் பாராட்டி கவுரவிக்கப்பட்டது..

பள்ளி நாட்களில், எதிர்காலத்தில் ஒரு #பைலட் ஆக வேண்டும் என்ற வலுவான ஆசையை சுமந்து நடந்தார் ஆதில்.

இதை A.P.உஸ்தாத் அவர்களிடம் தெரிவித்த போது எல்லா விதமான வசதிகளையும், ஒத்துழைப்பையும், மனதார மிக்க மகிழ்ச்சியோடு ஆதிலுக்கு உஸ்தாத் அவர்கள் வழங்கினார்கள்...

தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன் ஆதில் உஸ்தாதை அணுகி அவருடைய ஆசீர்வாதத்தை பெறவும் மறக்கவில்லை.

தன் கனவை நனவாக்கிய உஸ்தாதுக்கு நன்றி சொல்வதற்குத் தான் உஸ்தாதை தேடி ஆதில் மர்கஸிற்கு வந்தார்...

சவுதி தபூக் ஐ.சி.எஃப் செயல்வீரர் நெய்யன் சைதலவி ஹாஜி மற்றும் ஸஃபியா ஆகியோரின் இளைய மகன் தான் ஆதில்...

#SSF_ காடப்பாடி பிரிவின் செயலாளராகவும் ஆதில்
செயல்பட்டு வருகிறார்....

*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*