வாழ்வில் வெளிச்சம் தந்த தந்தை..
வாழ்வில் வெளிச்சம் படர்த்திய வாப்பா.
✍️.டாக்டர் #முஹம்மது_சஃப்வான்.
வாப்பாவுடன்....
நான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அழகிய தருணம் இது.
மருத்துவ படிப்பின் பட்டம் பெற்ற சான்றிதழைப் பார்த்ததும் உஸ்தாதின் முகத்தில் படர்ந்த அந்த ஆனந்த புன்னகை.
இதற்காக மட்டுமே நான் எவ்வளவு நாட்கள் ஆவலோடு காத்திருந்தேன்....
எனது வாழ்வின் மிகப்பெரிய தூனாக இருந்த என் சொந்த தந்தையின் மறைவுக்குப் பிறகு....
கோழிக்கோடு மர்கஸில் ஷேகுனாவுக்கு அருகில் ஒன்றும் அறியாத அந்தப் பருவத்தில் மனக்கவலைகளோடு ஒன்பதாம் வகுப்பில் வந்து சேர்ந்தேன்...
11 ஆண்டுகளுக்கு பிறகு இன்று எனது பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என்ற வார்த்தையை பெருமையுடன் சேர்க்கிறேன் எனில் அதற்கு ஒரே ஒரு பதில்தான்.
ஷேகுனா ஏ.பி உஸ்தாத்..
நான் உட்பட ஏராளமான நிர்கதியற்ற மக்களை வெவ்வேறு துறைகளில் முன்னேறச் செய்த எங்கள் அன்பு வாப்பா...
அவர்களுக்கு அல்லாஹ் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கி அருள்புரிவானாக...
*டாக்டர் முஹம்மது சஃப்வான்.*
*தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*