இரவுக்கதை மாநபியின் இரவு வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம்
அஸ்ஸலாமு அலைக்கும்..
#மாநபி_சிறப்பை_விவரிக்கும் #ஐந்தாவது_நூல்_வெளியீடு.
அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1500_ வது பிறந்த நாளை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த சங்கையான ரபீஉல் அவ்வல் மாதத்தில் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் (SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு
எத்தி வைக்கும் நோக்கில் வெவ்வேறு தலைப்புகளில் 12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
#இரவுக்கதை எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரவு வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம்
20/9/2025 அன்று சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பு சார்பில்
தக்கலை பீர் முஹம்மது அப்பா அரங்கில் வைத்து நடைபெற்ற மாவட்ட (சாகித்யோத்சவ்) கலை இலக்கிய விழாவில் வைத்து AZE ZEE Developments Founder இன்ஜினியர் முஹம்மது அஸீம் அவர்கள் முதல் பிரதியை வெளியிட புத்தன் துறை முஸ்லிம் ஜமாஅத் செயலாளரும்,பன்னூல் ஆசிரியருமான அப்துல் கரீம் அல்ஜீலி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..
இரண்டாவது பிரதியை தமிழக முஸ்லிம் ஜமாஅத்தின் குமரி மாவட்ட தலைவர்
அல்ஹாபிழ் மெளலானா மெளலவி அஹ்மது கபீர் அல்தாஃபி உஸ்தாத் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..
மூன்றாவது பிரதியை
இன்ஜினியர் முஹம்மது அஸீம் அவர்கள் வெளியிட மலேஷியா ஈப்போ மஸ்ஜித் இந்தியாவின் தலைவர்
ஷெய்கு முஜீபுர்ரஹ்மான் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..
நான்காவது பிரதியை சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் அல்ஹாபிழ் மெளலானா மெளலவி
M.நிஸாமுத்தீன் அஹ்ஸனி அவர்கள் வெளியிட தமிழக முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்ட செயலாளர் திருவை மாலிக் முஹம்மது பெற்றுக் கொண்டார்கள்.
ஐந்தாம் பிரதியை சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் அல்ஹாபிழ் மெளலானா மெளலவி
M.நிஸாமுத்தீன் அஹ்ஸனி அவர்கள் வெளியிட தமிழக முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்ட பொருளாளர் குளச்சல் சித்தீக் அண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது..
வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...
ஆமீன் யா றப்பல் ஆலமீன்
அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்..