சங்கயான மாநபியின் 1500_ பிறந்த நாளில் எமது சிறு முயற்சி
அல்ஹம்துலில்லாஹ்
மாநபியின் 1500_ம் மீலாத் விழாவை முன்னிட்டு நாமும் ஏதாவது ஒரு சிறப்பான காரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்
மாநபி சிறப்பை விவரிக்கும்
வண்ணம் புத்தகங்கள் சில வெளியிட வேண்டும் என்று ஒரு வருடத்திற்கு முன்பே தீர்மானித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டேன்..
ரபீஉல் அவ்வல் மாதத்தில்
12_ புத்தகங்கள் வெளியிட நினைத்து
அல்லாஹ்வின் பேரருளால் ஏழு புத்தகங்கள் வெளியிட முடிந்தது.
ஒவ்வொரு புத்தகத்திற்கும் பொருளாதாரத்திற்கு
பலரை அணுக வேண்டியிருந்தது.
சிலர் எந்தவொரு ரெஸ்பான்ஸும் தருவதில்லை.
சிலர் மிக கண்ணியத்துடன் நாம்
கூறும் விஷயத்தை பொறுமையுடன்
செவிமடுத்து பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து தருவர்.
இதன் மூலம் மாநபி நேசம் கிடைக்க ஆவல் கொள்வர்..
உலகெங்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1500_மீலாத் விழாவை முன்னிட்டு ஏராளமான ஆஷிக்கீன்கள்
பல்வேறு நற்பணிகளை செய்வதை நாம் பார்த்தோம்.
எத்தனை எத்தனை நற்பணிகள்.
வல்லோன் அல்லாஹ் எல்லோரது நற்காரியங்களையும் அங்கீகரித்து மகத்தான நற்கூலியை வழங்கியருள்வானாக..
ஆமீன் யா றப்பல் ஆலமீன்...
குறிப்பு: இன்னும் ஒரு ஐந்து புத்தகங்கள் வெளியிட இருக்கிறது
இன்ஷா அல்லாஹ் விரைவில் அவையனைத்தும் உங்கள் கரங்களில் தழுவிட உங்கள் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் ஆதரவு வைக்கிறேன்..