முதுப்பெரும் உலமாக்கள் கெளரவிப்பு
அஹ்னுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்
முதுபெரும் ஆலிம்களை கண்ணியம் செய்யும் மகத்தான நிகழ்வு.
தமிழ்கூறும் நல்லுலகில்
50 ஆண்டுகளுக்கும் மேலாக..
பள்ளிவாசல் இமாம்களாக,
மக்தப் மதரஸா ஆசிரியர்களாக,
அரபிக் கல்லூரி பேராசிரியர்களாக, எழுத்தாளர்களாக, சொற்பொழிவாளர்களாக, சன்மார்க்க,
சமயப் பரப்புரைப் பணிகளில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து மகத்தான சேவை ஆற்றிவரும் 73 வயதை நிறைவு செய்த கண்ணியமிகு மூத்த உலமாக்கள் 86- நபர்களை
பாராட்டி ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி மற்றும் சிறப்பு கேடயம் வழங்கி கெளரவிக்கிறது.
இந்த புண்ணியம் வாய்ந்த கெளரவிக்கும் விழாவில் நமது குமரி மாவட்டம் தேங்கையைச் சார்ந்த மெளலானா மெளலவி அபுதாஹீர் மன்பஈ
ஆலிம் அவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்
உள்ள
PSM கிராண்ட் பேலஸில்
வைத்து நடைபெற்றது.
இந்த சங்கையான நிகழ்வில் ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகப் பெருமக்கள்,
மார்க்க அறிஞர்கள்,
அரசியல் பிரமுகர்கள்,
உமராக்கள்,
சமுதாய தலைவர்கள்
என ஏராளமான பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
இதுவரை ஐந்து நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இது ஆறாவது நிகழ்வு ஆகும்!
வல்லோன் அல்லாஹ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகப் பெருமக்கள்,
நிதியுதவி அளித்த கொடையாளிகள்,
இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடந்தேறிட
அல்லும் பகலும் அயராது ஓடோடி உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பொருளாதார செழிப்பையும் வழங்கி அருள்வானாக.....