Sirajudheen Ahsani
எழுத்தாளர்

படைத்தவனை நெருங்க படைப்புகள் இதற்கு

படைத்தவனை நெருங்கத் தொழவேண்டும். தொழுவதற்கு உளூச் செய்ய வேண்டும். உளுச் செய்யத் தண்ணீர் வேண்டும்.தயம்மும் செய்ய மண் வேண்டும்.தண்ணீரும் மண்ணும் படைப்புகள் தானே ! தொழுவதற்கு பள்ளி அல்லது வீடு வேண்டும். ஆடை வேண்டும். பள்ளி, வீடு,ஆடை படைப்புகள் தானே!

படைத்தவனை நெருங்க வணங்க வேண்டும். வணக்கம் புரிய உடல்நலம் வேண்டும். உடல் நலத்திற்கு உணவும் நோய் விலக மருந்தும் வேண்டும்.உணவும் மருந்தும் படைப்புகள் தானே!

படைத்தவனை நெருங்க மார்க்கக் கல்வி வேண்டும். கல்வியைக் கற்பித்துத்தர உஸ்தாதுமார்கள் வேண்டும்.கல்வி கற்க நூல்கள் வேண்டும்.நூல்களை அச்சடிக்க எந்திரங்கள் வேண்டும்.இவைகள் படைப்புகள் தானே !

மார்க்கத்தைச் சொல்லித் தர நபிமார்கள்,ஸஹாபாக்கள் வேண்டும். துஆ ஏற்றுக் கொள்ளப்பட நபியின் மீது ஸலாத் சொல்ல வேண்டும். மறுமையில் வெற்றி பெற நபிமார்கள், நல்லடியார்களின் சிபாரிசு வேண்டும்.இவர்கள் படைத்தவனின் படைப்புகள் தானே! சிபாரிசு செய்வார்கள் என்பது ஹதீஸ்களில் வந்தது தானே!

(புகாரி எண் 214) அஹ்மத் எண் : 13222

படைத்தவனுடன் நெருங்க பிற முஸ்லிம்கள் நமக்காகச் செய்யும் துஆக்கள் தேவைப்படுகிறது. (திர்மிதி எண் : 3557 ) பிற முஸ்லீம்கள் படைப்புகள் தானே !

எல்லா முஸ்லிம்களும் தெரிந்துவைத்திருக்கும் இந்த அடிப்படை உண்மைகளை மறுப்பதற்கு ஒரு மாநாடு எதற்கு?

சத்திய மார்க்கப் பிரச்சாரத்தில் என்றும் சுறுசுறுப்புடன்

ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னா (JAS )

(திருவிதாங்கோடு கிளை)