போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்..
போரை முடிவுக்குக்
கொண்டு வாருங்கள்.
மனித உயிர்களை காப்பாற்றுங்கள்.
வரலாறு காணாத படுகொலைகளை
இஸ்ரேல் தற்போது காசாவின்
ரஃபாவில் நடத்தி வருகிறது.
அகதிகள் முகாம்களில் கூட வன்முறைகள் தொடரும் மனிதாபிமானமற்ற இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 36,244 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் காசா-எகிப்து எல்லையை கைப்பற்றி பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகள் கூட நிறுத்தப்பட்டதை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மாணவர் போராட்டங்கள்,
சமூக ஊடக பிரச்சாரங்கள் மற்றும் சர்வதேச நாட்டு தலைவர்களின் கண்டன குரல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஆனால் இவ்வளவு அநீதிகள் நடைப்பெற்றும் கண் திறக்காமல் இருக்கும் இஸ்ரேலின் பயங்கரவாதம் உலக மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அத்னான் அபுல் ஹைஜா அவர்களை கடந்த வாரம் மர்கஸில் சந்தித்தபோது இதே கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
நட்புரீதியான உரையாடலுக்கு பின்னர் கூட்டங்களில் மேற்கு ஆசியாவின் அரசியல் பதட்டங்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி பேசும் அவர் தனது மக்கள் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கும் போதும் ஒரு போதும் மனம் தளராமல் இதை பகிர்வதை நான் கவனித்தேன்.
இந்த நம்பிக்கையின் உணர்வுதான் ஒவ்வொரு பாலஸ்தீனியருக்கும் பெரும் துன்பத்தை எதிர்கொண்டாலும் சமாளிக்கும் வலிமையை அளிக்கிறது.
அக்டோபர் ஏழுக்கு பிறகு
காசாவில் நடைபெறும் படுகொலைகளை எதிர்த்து மாபெரும் கண்டன குரல்கள் எழுப்பியும்,
பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியும்
இந்திய மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் உறவுகளை புதுப்பிப்பதற்காகவும்
இந்த முறை தூதுவரின் வருகை இருந்தது. இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பல்வேறு ஒற்றுமைக் கூட்டங்கள் மற்றும் மசூதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்றவற்றில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சியோனிச பயங்கரவாதத்தின் ஆழத்தை வெளிப்படுத்தி பாலஸ்தீனியர்களுக்காக குரல் எழுப்புவதன் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். அண்மையில் நான் மலேசியாவுக்குப் பயணமானபோது, கோலாலம்பூரில் நடைபெற்ற மதத் தலைவர்கள் மாநாட்டில் பாலஸ்தீனப் பிரச்சினையை எழுப்பியதும்,
இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி சில மாதங்களுக்கு முன்பு பிரதமருக்குக் கடிதம் அனுப்பியதும் நான் இதை மிக மதிப்புடன் பார்க்கிறேன் என்று நன்றியுடன் கூறியதும்
உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது ஒரு தேசம் எவ்வளவு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பும் கொண்டுள்ளார்கள் என்பதை இது உறுதிப்படுத்தியது.
உலக முஸ்லிம்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் இறை நம்பிக்கை யாளர்கள் தொழுகை நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நாம் நிராகரிக்க முடியாது.
மன ரீதியான ஆதரவு, பிரார்த்தனை,
சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் போன்றவை மேலும் இஸ்ரேலின் புறக்கணிப்பு அணுகுமுறை எப்போதும் தேவை.
தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, பாலஸ்தீனியர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவு கிடைத்து வரும் நிலையில் நேச நாடுகளின் இடைவிடாத அணுகுமுறையும் உதவியும் மனித மனசாட்சியையே வெட்கப்பட வைத்துள்ளது.
ஆனால் பின்னர், அத்தகைய நாடுகளில் கூட பெரிய வடிவத்தில் எதிர்ப்பு அலைகள் கிளம்பியது சிறிய நம்பிக்கையை அளிக்கிறது
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிரபல பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், வளாகத்திற்குள் போராட்ட முகாம்களை தயார் செய்து ஒற்றுமையை வலுப்படுத்தும் அசாதாரண செயல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கண்டன எதிர்ப்பு குரல்கள் அமெரிக்காவின் போர் உதவி நிலைப்பாட்டில் மாற்றத்தை உருவாக்க முடிந்தது.
சமீபத்திய ஐ.நா விவாதங்களிலும் வாக்கெடுப்பிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததன் பின்னணியில் இந்த மாணவர் இயக்கத்தின் செல்வாக்கும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பதும் நம்பிக்கையளிக்கிறது.
வரலாற்று ரீதியாகவும், 1948 ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படியும் குறைந்தபட்சம் ஒரு பிடி நிலத்திலாவது தங்கள் சொந்த அரசை நிறுவுவதற்கு உரிமையுள்ள பாலஸ்தீனிய மக்களுக்காக ஒற்றுமை பேரணிகள் மற்றும் ஆதரவுகளை வழங்கிட அனைத்து மனிதநேயர்களும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வழிபாட்டுத் தலங்களில் ஆதரவு பிரார்த்தனைகள் எப்போதும் நடைப்பெற்று கொண்டே இருக்க வேண்டும் அதை நிறுத்தி விட வேண்டாம்.
✍️இந்தியன் கிராண்ட் முஃப்தி.ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத்.
தமிழில்:
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.