ஹத்தாத் ராத்தீப்

ஹத்தாத் ராத்தீப்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

தொற்று_நோயிலிருந்து
பாதுகாப்பு பெற்றிட ஹத்தாத்_ராத்தீப்_ஓதுவோம்.

✍️.ஆக்கம்:
S.#ஷறஃபுத்தீன்_அஸ்ஹரி.
இமாம்.அஞ்சுவன்னம்
ஜும்ஆ மஸ்ஜித்.
திருவை.

மனம் நிம்மதியாக இருக்கும் போது தான் மனிதன் ஆன்மீக மற்றும் உலக விஷயங்களில் வெற்றியை அடைய முடியும்.

ஆன்மாவையும், இதயத்தையும், உடலையும் ஒரேமாதிரியாக வளர்க்க வேண்டுமென்றால் மனம் அமைதியாக இருக்க வேண்டும்.

*மனதை அமைதிப்படுத்த ஒரேயொரு முக்கியமான வழி அல்லாஹ்வை நினைவு கூறுவதாகும்..*

*மனித மனம் இன்று பெரும் அச்சத்துடன் செய்வது அறியாது திகைக்கிறது..*

*தொடர் துயரங்களும், மரணங்களும் நம் மனதின் நிம்மதியை மிகவும் பாதிப்பு அடைய செய்து விட்டது...*

*கவலையும், நஷ்டங்களும் இல்லாத மனிதன் இன்று உலகில் யாரும் இல்லை..*

*இன்றைய சூழ்நிலையை போன்ற ஒரு தொடர் நெருக்கடி நிலையை நாம் இதற்கு முன் வாழ்வில் சந்திக்காதவையாகும்.*

*இந்நிலை மாற நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம்.*

*இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்...?*

*அல்லாஹ்வை நினைவு கூறுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை.*

*தெய்வீக சிந்தனையுடன் மனதைக் கட்டுப்படுத்தவும், தெளிவுப்படுத்தவும் கூடிய செயல்கள் எப்போதும் மனிதர்களிடமிருந்து வெளிவர வேண்டும்..*

*ஆனந்த வேளையில் அல்லாஹ்வை மறந்து உலக ஆடம்பரங்களில் மூழ்கும் நிலையிலிருந்து மனிதன் விடுபட வேண்டும்.*

*வெளிப்புற வழிபாட்டுடன் ஆத்மாவை நிரப்பும் நல்ல செயல்களைச் செய்து வாழ்க்கையில் அதை நிரந்தரம் கடைபிடிக்க முடிந்தால் கண்டிப்பாக நாம் வெற்றியாளர்கள் கூட்டத்தில் சேர்ந்து விட முடியும்..*

*நம் அனைவருக்கும் அல்லாஹ் அந்த மகத்தான பாக்கியத்தை வழங்கி அருள்புரியட்டும்..*

*அல்லாஹ்வின் நினைவு மட்டுமே மன அமைதியைத் தருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..*

*நின்றவர்களாக, இருந்தவர்களாக, பக்கவாட்டில் சார்ந்தவர்களாக என எல்லா நிலைகளிலும் நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்...*

*"மிகவும் உன்னதமான அமல் எதுவெனில் உன் நாக்கு அல்லாஹ்வை நினைவு கூர்ந்த நிலையில் மரணிப்பதாகும்"*

*"அல்லாஹ்வின் சிந்தனையைத் தவிர வேறு காரியங்கள் என் இதயத்தில் நுழையும் போது நான் பரிபூரண முஸ்லிமல்லாதவனாகி விட்டேன்...*

*போன்ற வசனங்கள் ஆன்மீக முறையில் நம்முடைய மனம், இதயம், மற்றும் உடல் பயணிக்க வேண்டிய தெளிவான பாதையை கோடிட்டு காட்டுகிறது...*

*இந்த அடிப்படையில் விசுவாசிகளின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காகவும், அல்லாஹ்வை நினைவு கூறும் காரணமாக அவர்களின் இதயங்களை பயனுள்ளதாக்குவதற்காகவும் பெரிய அறிஞர் பெருமக்களான ஆரிஃபீன்கள், மற்றும் சான்றோர்கள் புனித குர்ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு பல திக்ருகளை தொகுத்துத் தந்துள்ளனர்...*

அதில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று தான் *ஹத்தாத் ராத்தீப்..*

*இந்த ராத்தீபிலுள்ள ஒவ்வொரு திக்ருகளும் புனித நபியின் ஹதீஸ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.*

*ஏராளமான மகத்துவங்களும், மிக முக்கியமான பல திக்ருகளும், தஸ்பீஹுகளும் அடங்கியது தான் ஹத்தாத்.*

இன்ஷா அல்லாஹ் வரும் தொடர்களில் இதை இயற்றியது யார்?
இது எங்கு முதலில் ஓதப்பட்டது, ஒவ்வொரு திக்ரின் மகத்துவங்கள் என்ன போன்ற விஷயங்களை பார்க்கலாம்...

*இன்ஷா அல்லாஹ்*
*வளரும்.*

*ஹத்தாத் ராத்தீப் PDF.file தேவைப்படுபவர்கள் கீழ் காணும் 7598769505 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்..

தகவல் :M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.