ரவ்ழா ஷெரீஃபில் கேட்ட பெரிய சத்தம்
இஸ்லாமிய வரலாறு

ரவ்ழா ஷெரீஃபில் கேட்ட பெரிய சத்தம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ரவ்ளா ஷரீஃபில் கேட்ட_பெரிய_சப்தம்

ஹிஜ்ரி 570_ம் வருடம் நடந்த நிகழ்ச்சி:
ஹாரூன் இப்னு அஹாது என்பவர் மூலம் அக்ஸஹரி என்பவர்கள் அறிவிப்பதாவது: மதீனாவில் உள்ள நபி(ﷺ) அவர்களின் கப்ரு உள்ள (ரவ்ளா ஷரீஃபில்) அறையில் நீண்ட பெரிய சப்தம் கேட்டதாக மதீனா வாசிகள் பேசிக் கொண்டனர்.
இவ்விஷயத்தை கலீஃபாவிற்கு கடிதம் எழுதி எப்படி நடந்து கொள்வது என கேட்கப்பட்டது.கலீஃபாவும் மார்க்க சட்ட நிபுணர்களிடம் (ஃபுகஹாக்களிடம்) ஆலோசித்து அவர்களின் பத்வாவை வேண்டி நின்றார்.

ஃபுகஹாக்கள் நபி (ﷺ) அவர்களின் கப்று இருக்கும் புனிதமிகு அறையில் நல்லொழுக்கமுள்ள ஸாலிஹான நல்ல மனிதர் நுழைந்து அது என்ன சப்தம் என பார்த்து வரவேண்டுமென தீர்ப்பளித்தனர்.

மதீனாவாழ் மக்களிடம் மிகவும் பயபக்தி உடையவரும், பகலெல்லாம் நோன்பு வைத்தும், இரவெல்லாம் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் அப்பாஸிய குடும்பத்தைச் சார்ந்த
(குறைஷி இனத்தவரான) பத்ரு லயீஃப் என்ற இளைஞரை தேர்வு செய்தனர்.

அவரின் இடுப்பில் கயிற்றைக் கட்டி நபி (ﷺ) அவர்களின் கப்ரு இருக்கும் அறையினுள் இறக்கினர்.
அவர் ரவ்ளா ஷரீஃபின் கிழக்கு புறத்தின் உட்புறமதில் இடிந்து விழுந்திருப்பதைக் கண்டார்.அதன் வெளிப்புற மதில் இடிந்ததால் உள்ளே இருந்த மரத்தாலான பெரியகுவளை உடைந்திருப்பதை பத்ருல் லஈஃப் பார்த்தார்.

அந்த உடைந்த குவளையும், ரவ்ளா மண்ணிலிருந்து சிறிது எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.இந்த உடைந்த குவளையும் நபி (ﷺ) அவர்கள் அடங்கப்பட்டிருந்த அறையின் சிறிதளவு மண்ணும் பக்தாது நகருக்கு கொண்டு வரப்பட்டது.

அதைக்காண கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.இப்புனிதமிகு பொருட்களைப் பார்க்க மக்களின் ஒருமுகமாக திரண்டனர்.இவைகளைப் பார்க்க மக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர்.அன்பு தொழிலும், வியாபாரமும் அலுவல்களும் ஸ்தம்பித்தன.பக்தாத் நகரமே விழாக்கோலம் பூண்டு பெருநாளாக காட்சியளித்தது.

#வஃபாஉல்_வஃபா.
பக்கம்= 569, 570. பாகம்= 2.

தகவல்.
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.