Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஊடகங்களின் நரித்தனம்

இந்த நபரின் முகத்தை கொஞ்சம் பாருங்கள். இவர், வட கொரியாவுக்கு வெளியே, எந்த நாட்டையும் அழிக்க தன் பலத்தை பிரயோகிக்கவில்லை. சிரியாவை துவம்சம் செய்ததில் இவருக்கு பங்கில்லை. ஈராக்ககை குட்டிச் சுவராக்கியதில் இவர் தொடர்புபடவில்லை. ஆபிரிக்காவை அறுத்து, சுறண்டி, அதனை பசி பட்டினி போடுவதில் இவர் பங்கெடுக்கவில்லை.

பலவீனமான நாடுகளை இவர் பயமுறுத்தி கொள்ளையடிக்கவில்லை. பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீச உடன்படவில்லை. இவர் ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசவில்லை.
தெற்காசிய நாடுகளில் அடிக்கடி நடக்கும் இனப்பிரச்சினைகளுக்கு இவர் தீனி போடவில்லை. லிபியிவை, ஆப்கானை அடக்க அடி எடுத்து வைக்கவில்லை.
சோமாலியாவைப் பிரிக்க சேர்ந்து வரவில்லை.

ஆனாலும் இவர் ஒரு சர்வாதிகாரி, ஒரு
இரத்தக்காட்டேறி, மனிதகுலத்தின் முதல் எதிரி என நவீன ஊடகங்கள் நம் மனதில் சித்தரித்து வைத்துள்ளன.

அதே நேரம், உலக நாடுகள் மீது குண்டுகள் வீசி நாட்டு மக்களை பசி பட்டினியில் போட்டு, அவர்களை அகதிகளாக ஆக்கி, உலகமெல்லாம் நெருப்பு மூட்டும் அராஜக அமெரிக்க, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற நாட்டு தலைவர்களை மிகப்பெரிய மனிதாபிமானிகளாக, உலகைக் காக்கும் ஜனநாயகவாதிகளாக ஊடகங்களால் நமக்குக் காட்டப்படுகின்றன.

ஊடகங்கள் இப்படித்தான் நம்மை மூளைச்சலவை செய்கின்றன.