மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் அவனுக்கு நிகர் யாருமில்லை

மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் அவனுக்கு நிகர் யாருமில்லை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கடைசியில் ஷெஹ்னா குழந்தையோடு விடைபெற்றாள்....

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி கிளாப்பனை முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்தவர் கபீர்.
இவரது மகள் ஷெஹ்னா
(வயது 32...)
சில தினங்களுக்கு முன் மதீனாவில் வைத்து மரணமடைந்தார்...

ஷெஹ்னாவின் கணவர் ஷெமீர் வெளிநாட்டில் (சவூதி அரேபியா, ரியாத்) வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதிகளுக்கு குழந்தை கிடையாது..
பிப்ரவரி மாதம் ஷெஹ்னா தனது கணவர் வேலை செய்யும் இடத்திற்கு பயணமானார்.
சில தினங்களுக்கு பின்னர் அவரது கணவரின் வேலை மதீனாவிற்கு மாற்றப்படுகிறது.
வேலை நிமித்தம் இருவரும் மதீனாவிற்கு வந்தனர்..

ஷெஹ்னா மரணிக்கும் ஒரு தினத்திற்கு முன் இருவரும் மதீனாவிற்கு ஸியாரத் சென்றனர்..
ஸியாரத்தின் வேளையில் ஷெமீர் மனைவியிடம் சொன்னார்.
உனக்கு முன்னாலே நான் மரணித்தால் என்னை இங்கே நல்லடக்கம் செய்ய வேண்டும்..
உடனே குறுக்கிட்டு ஷெஹ்னா கணவரிடம் சொன்னார்.
உங்களுக்கு முன் நான் தான் மரணிப்பேன்.
நான் மரணித்தால் நீங்கள் என்னை இங்கே நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றார்..

ஷெஹ்னாவுக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது.
மறுநாள் மதீனாவில் வைத்து தலை சுற்றி கீழே விழுந்து மரணமடைகிறார்.
انا لله وانا اليه راجعون
அல்லாஹ்வின் விதியை பார்த்தீர்களா...?

அவரை அங்கே நல்லடக்கம் செய்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது திடீரென பிறந்து மூன்று தினங்களாகி மரணமடைந்த ஒரு குழந்தையை சிலர் கொண்டு வருகின்றனர்.

அந்த குழந்தையை ஷெஹ்னாவின்
கப்ருக்குள் அவரது நெஞ்சோடு சேர்த்து வைத்து அடக்கம் செய்தனர்..

குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஷெஹ்னா அழாத, மனமுருகாத, துடிக்காத
அல்லாஹ்விடம் துஆச் செய்யாத, கெஞ்சாத நாட்களே இல்லை..
ஆனால் தனது இறைவன் ஒரு போதும் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது..

கடைசியில் ஷெஹ்னாவுக்கு அல்லாஹ் வழங்கிய பாக்கியத்தை பார்த்தீர்களா..

நல்ல இடத்தில், நல்ல மாதத்தில், நாயகத்தின் தங்க பூமியில், நபித்தோழர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகத்தான பூமியில்
சங்கையான தினத்தில் வல்லோன் அல்லாஹ் ஷெஹ்னாவுக்கு பிஞ்சு பைதலை கொடுத்து அவளது நெஞ்சோடு சேர்த்து வைத்து கருணை காட்டியுள்ளான்...
நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது...

எல்லாம் அவன் செயன்...
யா அல்லாஹ் எங்கள் மீதும் உனது வற்றாத கருணையை பொழியச் செய் றஹ்மானே, பெரியோனே ரஹீம்..

தமிழில்:
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி...