Sirajudheen Ahsani
எழுத்தாளர்

.........#அழகிய_கேரளா_ஸ்டோரி.......

#விஜயலட்சுமியின்_மரணம், #மதரசாவுக்கு_விடுமுறை...

அன்பு உலகம் படைப்பதில் மலப்புறம் மாவட்டம் என்றும் முன்வரிசையிலேயே உள்ளது.

ஆம்!!
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் குழிப்புறம் என்னும் ஊரிலிருந்து எல்லோரது மனதையும் குளிரச் செய்யும் ஓர் அழகிய செய்தி வந்துள்ளது..

வேலாயுதம் என்பவரின் மனைவி விஜயலட்சுமி ஓரிரு தினங்களுக்கு
முன் மரணமடைந்த போது அவர்களது வீட்டுக்கு அருகிலுள்ள தஃலீமுஸ் ஸிப்யான் மதரசாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது...

விஜயலட்சுமியின் அகால மரணச் செய்தி கேட்டவுடன் மதரசா தலைமையாசிரியர் #அப்துல்_மஜீத்_முஸ்லியார் மற்றும் மதரசா நிர்வாகிகள் விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்து குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்று அவர்களை ஆறுதல் படுத்தினர்...

வெளியூரிலிருந்து வந்த வேலாயுதனின் குடும்பத்தவர்கள் இரவில் மதரசாவில் தங்க வைக்கப்பட்டனர்....

இவர்களுக்கு தேவையான உணவுகள் மதரசா நிர்வாகிகள் கொண்டு கொடுத்தனர்..
மேலும் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்..

சடலத்தை அடக்கம் செய்ய ஷொர்னூருக்கு கொண்டு செல்லும் வரை
வேலாயுதனின் குடும்பத்தினருக்கு தேவையான எல்லா உதவிகளையும் மதரசா நிர்வாகிகள் வழங்கி கொண்டே இருந்தார்கள்...

வேலாயுதனின் குடும்பவும்
மதரசாவுக்கும் மத்தியிலுள்ள
#அன்பு_உறவு_மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருகிற ஒன்றாகும்..

மதரசாவுக்கு யாராவது இனிப்பு வகைகளோ, உணவு வகைகளோ வழங்கினால் அதன் ஒரு விகிதம் வேலாயுதனின் வீட்டுக்கு
மதரசாவிலிருந்து கொடுக்கப்படும்.

அதுபோலவே வேலாயுதனின் வீட்டில் ஏதாவது விஷேச தினங்களில் மதரசா நிர்வாகிகள் துவக்கம் முதல் கடைசி வரை ஒரு குடும்ப உறுப்பினர்கள் போல் அங்கு சென்று கலந்து சிறப்பிப்பார்கள்.

மீலாத் விழா போன்ற சந்தர்ப்பங்களில் உதவி செய்ய வேலாயுதனும், குடும்பத்தவர்களும் மதரசாவுக்கு வருவார்கள்.

வேலாயுதனின் குடும்பம் பல வேளைகளில் தண்ணீர் தேவைக்காக மதரசாவைத்தான் நாடுகிறார்கள்...

வேலாயுதன் தையல் தொழில் செய்து வருகிறார்..
மக்கள் ஜியூஸ், ஜிம்ஷி
மருமகள், மிஹிஷா......

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி