Sirajudheen Ahsani
எழுத்தாளர்

*மதரசாக்கள்.*
*#நாட்டின்_நன்மைக்கு.*

மதரஸாவில் பயங்கரவாதம் மற்றும் மதவெறி கற்பிப்பதாக நம்பும் ஒரு பெரிய பிரிவினர் இங்கே உள்ளனர்.

சமீபகாலமாக நம்மிடையே நட்பாக இருப்பவர்கள் கூட மதரஸாக்களைப் பற்றி மோசமாகப் பேசுவதைப் பார்த்து வியந்து இருக்கிறேன்..

சங்பரிவாரத்தின் பொய்ப் பிரச்சாரம் அவ்வளவு தூரம் முஸ்லிம் அல்லாத பலரைச் சென்றடைகிறது என்பது புரிகிறது.

பெரும்பாலான முஸ்லிம்கள் மதரஸாவில் கல்வி கற்றவர்களாக இருப்பார்கள்.
மதரஸாவில் என்ன நடக்கிறது என்பதை சுருக்கமாக விவரிக்கலாம் என நினைக்கிறேன்..

முஸ்லிம்களின் மத நம்பிக்கை மற்ற மத வழிபாட்டு முறைகளைப் போல் இல்லை.
ஏதாவது நேரத்தில் வழிபடுவதோ அல்லது விரும்பும்
பிரார்த்தனைகளை புரிவதோ அல்ல முஸ்லிம்களுடையது.
எல்லா கர்மங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களும்,
வெவ்வேறு பிரார்த்தனைகளும் உண்டு.
அதை அந்தந்த குறிப்பிட்ட நேரத்தில் ஒரு முஸ்லிம் கண்டிப்பாக நிறைவேற்றியாக
வேண்டும்..

ஒரு முஸ்லிமின் வாழ்க்கை அவன் காலையில் எழுந்தது முதல் அவன் தூங்கச் செல்லும் நேரம் வரை எண்ணங்களையும், செயல்களையும் கொண்டுள்ளது
மேலும் அந்த செயல்களுக்கு வெகுமதி கிடைக்கும் என்று அவன் நம்புகிறான்...

தூங்கி எழுந்தவுடன்
இறைவனை துதிக்க வேண்டும்,
பல் துலக்க வேண்டும்.
கழிவறைக்குள் நுழைவதில் பேண வேண்டிய ஒழுக்கங்கள், கழிப்பறையிலிருந்து வெளியேறும் போது கடைப்பிடிக்க வேண்டிய
மரியாதைகள்,
குளிக்கும் போது பேண வேண்டியவை, சாப்பிடுவதற்கு முன் ஓத வேண்டிய பிரார்த்தனை,
உணவை எப்படி மதிக்க வேண்டும்.
உண்ணும் போது கடைபிடிக்க வேண்டிய மரியாதைகள்,
சாப்பிட்ட பிறகு சொல்ல வேண்டிய பிரார்த்தனை..

வீட்டை விட்டு வெளியேறும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்,
வாகனம் இருந்தால்
வாகனத்தில் ஏறும் போது சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
நடக்கும்போது வழியில் இருப்பவர்களைப் பார்த்து புன்னகைப்பது.
முகமன் கூறுவது,
அழகிய உறவை ஏற்படுத்துவது,
வழியில் தடைகளைக் கண்டால் அவற்றை அகற்றவது.
பொய் சொல்லாமல் இருத்தல்
யாருக்கும் தீங்கு செய்யாது இருத்தல்.
பிறர் நலம் நாடுவது,
நோய் நலம் விசாரிப்பது,
மரணித்தால் அவருக்காக நடத்தப்படும், தொழுகையில்,
பிரார்த்தனைகளில் பங்கெடுப்பது,

குறித்த நேரமாகி விட்டால் தொழுவது, தொழுகைக்கு
முன் வுளூஃ செய்வது ,
வுளூஃ செய்வதின் முறை.
மசூதிக்குள் நுழையும் போது ஓத வேண்டிய பிரார்த்தனை,
தொழுகை, தொழுகையின் ரீதி, தொழுகையில் சொல்ல வேண்டிய பிரார்த்தனைகள்.
யார் தொழ வேண்டும்?
யார் தொழக்கூடாது.

நீங்கள் ஒரு வர்த்தகராக இருந்தால், எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும்,
அளவு நிலுவையில் மோசடி
செய்யாமல் இருப்பது,
மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதமாக கொள்ளை லாபம் எடுக்கக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள்.
பணிபுரிபவராக இருந்தால் பணியிடத்தில் பின்பற்ற வேண்டிய
ஒழுங்கு மரியாதைகள்..

தவறான வழியில் பணம் சம்பாதிக்காதீர்கள், இருத்தல்,
தவறான விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்யாதீர்கள்.
மது அருந்தாதீர்கள்,
போதைப் பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்,
பிறரை ஏமாற்றாதீர்கள்.
திருடாதீர்கள்,
விபச்சாரம் செய்யாதீர்கள்
மற்றும் சமூக பொறுப்புகள்,
அதில் கடைப்பிடிக்க வேண்டியவை.

வீட்டிற்குத் திரும்பும்போது பெற்றோர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை,
அவர்களை எப்படி கவனித்துக்கொள்வது.
திருமணம் செய்து விட்டால் மனைவி மற்றும் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும்.

இதற்கிடையில் உறவினர்கள் வீட்டிற்குப் போக வேண்டும்,
குடும்ப உறவு சேர்க்கப்பட வேண்டும். தொண்டு செய்ய வேண்டும்.
எளிய மக்களுக்கு தர்மம் அளிக்க வேண்டும்,
ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
இறுதியாக இரவில் படுக்கை நேர பிரார்த்தனை செய்து தூங்க செல்வதுடன் ஒரு விசுவாசியின் ஒரு நாள் முடிவடைகிறது.
அவனுடைய நல்ல செயல்களுக்கு வெகுமதியும், அவனது கெட்ட செயல்களுக்கு தண்டனையும் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், மதரஸாக்களில் இதுதான் கற்பிக்கப்படுகிறது.
இந்த அனைத்து செயல்களுக்காகவும் ஓத வேண்டிய பிரார்த்தனைகள் மத்ரஸா புத்தகத்தில் உள்ளன.
மதரஸாவில் எங்குமே மதவெறி அல்லது பயங்கரவாதம் கற்பிக்கப்படவில்லை.

ஒரு முஸ்லிமின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை முறையை மதரஸா பாடத்தில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது...
அந்த மதரசா கல்வி முற்றிலும் நன்மை சார்ந்தது மற்றும் தீமைக்கு வெறுப்பானது.

மதரஸாவில் கற்றபடி வாழ்ந்தால் நல்ல மனிதனாகலாம்.
துரதிர்ஷ்டவசமாக பல முஸ்லிம்களும் மதரஸாவில் படித்தது போல் வாழ்வதில்லை.
அதனால்தான் குற்றவாளிகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் பெயர்களும் இடம் பெறுகின்றன.

ஜம்ஷீர் மலப்புறம், கேரளா..

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி