அநீதியை தட்டிக் கேட்கும் ஒரு தலைமுறை இன்ஷா அல்லாஹ் வரும்
இஸ்லாமிய வரலாறு

அநீதியை தட்டிக் கேட்கும் ஒரு தலைமுறை இன்ஷா அல்லாஹ் வரும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அநீதியை_தட்டிக்_கேட்க
ஒரு_தலைமுறை
இன்ஷா_அல்லாஹ்_வரும்.

பள்ளிவாசல்களை தகர்த்தவர்கள் பள்ளிவாசல்களின் பணியாளர்களாக மாறினார்கள் என்பது தான் வரலாறு.

கிபி 11 ம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் செங்கிஸ்கானின் தலைமையில் வெளிப்பட்ட தாத்தாரிகள் முஸ்லிம் உலகின் மீது படை எடுத்தார்கள். பக்தாது வரை கைப்பற்றினார்கள். பல இலடம் முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள்.

பல்லாயிரம் பள்ளிவாசல்களையும் மதரஸாக்களையும் சிதைத்தார்கள்.
நூல் நிலையங்களை எரித்தார்கள்

வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா ?

முஸ்லிம் உலகின் மீது பேரழிவை நிகழ்த்திய இந்த நாசகர சக்திகள் 40 வருடங்களுக்குள்ளாக முஸ்லிம்களாக மாறினார்கள்.

அவர்களே பள்ளிவாசல்களை புணரமைத்தார்கள்.

இஸ்லாம் அதுவரை செல்லாத நிலப்பரப்புகளுக்கும் இஸ்லாமை கொண்டு சென்றார்கள்.

ரஷ்யாவை ஒட்டியிருக்கிற ஐரோப்பிய பகுதிகள் பின்லாந்து போலாந்து ஸ்காண்டினோவா போன்ற பல பகுதிகளுக்கும் இஸ்லாமை கொண்டு சென்றது தாதாரியர்களே என்று வரலாறு செல்கிறது.

வரலாற்றின் ஒரு பெரிய திருப்பம் என்ன வெனில் ?

இப்போதைய ரஷ்யாவிற்குள் தாதாரிஸ்தான் என்ற ஒரு சுயாட்சி பிரதேசம் இருக்கிறது.
அது தாதாரிகளின் தற்போதைய நாடாக அறியப்படுகிறது.

அந்த தாதாரிஸ்தானை ரஷ்யர்கள் ஆக்ரமித்தார்கள். இஸ்லாமை கைவிட நிர்பந்தித்தார்கள். பள்ளிவாசல்களை பூட்டினார்கள். மதரஸாக்களை மூடினார்கள். திருக்குர் ஆனை கூட தடைசெய்தார்கள்.

ஓர் ஆண்டல்ல ஈராண்டல்ல.
சுமார் 80 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகளுடைய கடுமையான ஆக்ரமிப்பு தொடர்ந்தது.

ஆனால் அது நிலைக்கவில்லை. கம்யூனிஸம் வீழ்ந்த்து.

தாதாரிஸ்தானின் முப்தி சொல்கிறார்.

எங்களது முன்னோர்களை சிறையில் அடைக்கத்தான் அவர்களால் முடிந்த்து. ஈமானை பறிக்க முடியவில்லை

يقول غوسمان ، مفتي تتارستان ، ( ينتشر الإيمان في دمنا وعظامنا ، يمكنك أن تخلع عن الواحد منا ثيابه وأن تلقيه في غياهب السجون ، لكنك لا تستطيع أن تنتزع منه إيمانا يمارس من ألف عام ، ويضف الناس هنا ليسوا ملحدين ، على رغم أن ثلاثة أجيال نشأت تحت الحكم السوفياتي ، بل هم يجهلون دينهم واليوم يعود كثيرون منهم إلى الاهتمام بالإسلام

அங்கு தற்போது 40 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
மொத்த மக்கள் தொகையில்
70 சதவீதம் அது.

ஒரு கட்டத்தில் இந்த பகுதியின் தலை நகரான காஸானில் ஒரு பள்ளிவாசல் மட்டுமே இருந்தது. இப்போது 50 பள்ளிவாசலகள் இருக்க்கின்றன.

ففي 1990م في عهد البيرويسرويكا لم يكن هناك سوى مسجد واحد في قازان ، أما اليوم فهناك خمسون مسجداً ،

தாதாரிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன.

தாதாரிஸ்தான் தலை நகர் காஸானில் ஒரு இஸ்லமிய பல்கலை கழகம் இருக்கிறது . அங்கு 7 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். ரஷ்யாவின் பல பகுதிகளுக்கும் அவர்கள் இஸ்லாமை கொண்டு சேர்த்து வருகிறார்கள்.

இஸ்லாமின் இந்த வரலாறு.
ஒரு தொடர் கதை தான் –

உமர் ரலி அவர்களில் தொடங்கி தாத்தாரியர்களில் தொடர்ந்து வந்திருக்கிறது.

அந்த வரலாறு விரைவில் நம்முடைய நாட்டிலும் தொடங்கும்.

அக்கிரமக்காரகள் நீடித்திருக்க முடியாது.