Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அனைவருக்கும் 79 வது
#இந்திய_சுதந்திர_தின_வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறைவன் நம் நாட்டிற்கு அருள் வளத்தையும் பொருள் வளத்தையும் நிரம்ப தருவானாக! உலகின் எந்த சர்வாதியாலும் தோற்க முடிக்காத வலிமையை தந்தருள்வானாக . நாட்டின் ஆட்சி தலைவர்களும், அரசு நிர்வாகத்திலிருப்பவர்களும் மக்களின் சுதந்திரத்தை பேணிக்காப்பவர்களாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

நமது நாடு உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு.
சுமார் 140 கோடி மக்கள்
இதன் உறுப்பினர்கள்.

இன்று நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை 140 கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்கிற போது இது உலகின் மாபெரும் கொண்டாட்டங்களில் இது ஒன்றாகும்.

பலதரப்பட்ட மொழி இனம் மதம் கலாச்சாரத்தை கொண்ட மக்கள் அனைவரும் இந்த கொண்டாட்டத்தை ஒன்றினைந்து கொண்டாடுகிறார்கள்.

இந்த கொண்டாட்டத்திற்கு காரணமான சுதந்திரம், நாட்டு மக்கள் அனைவரும் வேறுபாடுகளை கலைந்து ஒன்றினைந்து பேதங்களை மறந்து இரண்டறக் கலந்து போராடி பெற்றதாகும்.

அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்
திருவிதாங்கோடு
குமரி மாவட்டம்...